இந்தியாவில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பலர் தவித்து வரும் வேளையில் unskilled மற்றும் skilled பிரிவில் அதிகப்படியான ஊழியர்கள் தேவைப்படும் துறையாக இந்திய கட்டுமான துறை உருவெடுத்துள்ளது. இந்திய கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதுக்குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
நைட் ஃபிராங்க் இந்தியா மற்றும் ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ் (RICS) இணைந்து நடத்திய முக்கியமான ஆய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆயிவில் இந்திய கட்டுமானத் துறை தான் நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் இன்ஜின் ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்திய கட்டுமானத் துறையில் தற்போது 7.1 கோடி பணியாளர்கள் பணியாற்றி வரும் வேளையில், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தையும், உள்கட்டமைப்புக்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடியை (100 மில்லியன்) தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பு தற்போது 650 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டு உள்ள வேளையில், 2030 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கட்டுமானத் துறையின் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 7.1 கோடி பணியாளர்கள் இருக்கும் வேளையில் இதில் 81 சதவீதம் பேர் திறமையற்றவர்கள் அதாவது Unskilled, வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே திறமையான பணியாளர்கள் Skilled employees.

இந்த நிலையில் இந்திய கட்டுமானத் துறையில் தற்போது Unskilled, Skilled என இரு தரப்புக்கும் வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இந்திய வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகவும் முக்கிய துறையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், திறமையான ஊழியர்களுக்கான டிமாண்ட் இத்துறையில் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிவகுத்தது வாயிலாகவும் திறமையான தொழிலாளர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications