யூடியூப் உலகம் ஒரு பொன்னான வாய்ப்பாகத் தோன்றலாம். விதவிதமான வீடியோக்கள், மில்லியன் கணக்கான பார்வைகள் ஆனால், இந்த மாயத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை மிகவும் கசப்பானது. சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் (BCG) வெளியிட்டுள்ள அறிக்கை, இந்திய யூடியூபர்களின் அதிர்ச்சியூட்டும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்தியாவில் சுமார் 2 முதல் 2.5 மில்லியன் யூடியூபர்கள் யூடியூபில் தீவிரமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால், இதில் வெறும் 8 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் உள்ளடக்கத்தை வைத்து கணிசமான வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை. மீதமுள்ள 90 சதவீத யூடியூபர்கள் சொற்ப வருமானத்தையே பெறுகிறார்கள் பாதிபேர் ஒரு ரூபாய்கூட சம்பாதிப்பதில்லை!

ஏன் இந்த வருமான ஏற்றத்தாழ்வு? இதற்கான முக்கிய காரணம், அளவுக்கு அதிகமான யூடியூபர்கள் களத்தில் இருப்பதுதான். லட்சக்கணக்கானோர் பார்வையாளர்களைப் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஒரு சிலரால் மட்டுமே அதை நிலையான வருமானமாக மாற்ற முடிகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான யூடியூபர்கள் விளம்பர வருவாய் மற்றும் பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஆனால், இந்த வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய செல்வாக்கு செலுத்துபவர்களுக்கே சாதகமாக அமைகின்றன.
வருமான இடைவெளி மலைக்கும் நிலத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போல இருக்கிறது. பெரும்பாலான யூடியூபர்கள் மாதத்திற்கு ரூ.18,000 க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். சிறிய படைப்பாளிகளின் ஆண்டு சராசரி வருமானம் வெறும் ரூ.3.8 லட்சம் மட்டுமே. ஆனால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட, அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் மற்றும் பெரிய பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள யூடியூபர்கள் மாதத்திற்கு ரூ.50,000 அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை மிக குறைவானது. இந்தியாவில், 1,000 பார்வைகளுக்கு விளம்பர வருவாய் ரூ.50 முதல் ரூ.200 வரை மட்டுமே கிடைக்கிறது. அதாவது, ஒரு லட்சம் பார்வைகள் கூட ரூ.5,500 முதல் ரூ.20,000 வரை மட்டுமே வருமானம் ஈட்டித் தர முடியும். இதுவும் அந்த வீடியோவின் வகை மற்றும் பார்வையாளர்களின் இருப்பிடத்தைப் பொறுத்தது.
இருப்பினும், BCG அறிக்கை வருமானத்தை அதிகரிக்க உதவும் சில புதிய வழிகளையும் கூறியுள்ளது. அதில், நேரடி விற்பனை, ரசிகர்கள் வழங்கும் மெய்நிகர் பரிசுகள், சந்தா அடிப்படையிலான வருவாய் மற்றும் இணைப்பு சந்தைப்படுத்தல் போன்ற முறைகள் யூடியூபர்களுக்கு வருமானத்தை பன்முகப்படுத்த உதவுகின்றன. யூடியூப் லைவ், மோஜ் மற்றும் ஷேர்சாட் போன்ற தளங்கள் ரசிகர்கள் நேரடியாக படைப்பாளிகளுக்கு டிப்ஸ் வழங்க வழிவகை செய்துள்ளன. ஃபேஷன், அழகு, உணவு, கேமிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பிரிவுகள் அதிக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. அதே நேரத்தில், நிதி, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளும் வளர்ந்து வருகின்றன. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் tier நகரங்களில் இவை வளர்கின்றன.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் யூடியூபர்கள் உருவாக்கும் உள்ளடக்கம் ஏற்கனவே ஆண்டுக்கு $350 முதல் $400 பில்லியன் வரையிலான நுகர்வோர் செலவினத்தை பாதிக்கிறது. இது 2030 ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த நுகர்வோர் செலவினத்தில் கால் பங்காகும். ஆனால், யூடியூபர்களின் நேரடி வருவாய் இன்று வெறும் $20 முதல் $25 பில்லியனாக மட்டுமே உள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பதற்கான வழி வெறும் பார்வைகளைச் சேகரிப்பது மட்டுமல்ல. விசுவாசமான மற்றும் ஈடுபாடுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான். யூடியூபர்கள் விளம்பர வருவாயை மட்டுமே நம்பாமல், வருமானத்தை பன்முகப்படுத்த வேண்டும். மேலும், ரசிகர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று BCG அறிக்கை அறிவுறுத்துகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications