இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 32 சதவீதம் கூடுதலாகும். இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தனியார் துறை மற்றும் பாதுகாப்பு பொது துறை நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் ஆர்டர்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ராஜ்நாத் சிங் செய்த பதிவில்,
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து ₹21000 கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்றுள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய பாதுகாப்பு உற்பத்தியின் திறன் ஆத்மநிர்பார் பாரத்தை பிரதிபலிப்பதாகப் பாராட்டி கூறினார். நமது மொத்த பாதுகாப்பு உற்பத்தி ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றார்.
பாதுகாப்பு இறக்குமதியாளரிலிருந்து ஏற்றமதியாளரான இந்திய பயணம்- இந்தியா தனது பாதுகாப்பு உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்ததுள்ளதை காட்டுகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் முந்தைய ஆண்டு பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு எழுச்சியைக் கண்டதன் மூலம் வரலாற்று வெற்றியைப் பெற்றது. எல்சிஏ-தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிகள் மற்றும் பலவற்றில் இந்திய பாதுகாப்புத் தயாரிப்புகளில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்ததன் மூலம் ஏற்றுமதியில் உயர்வு ஏற்பட்டது.
இந்தியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் தயாரிப்புகளை 85 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அதன் பாதுகாப்புத் துறையின் வலிமையைக் காட்டுகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்புத் தயாரிப்புகளை தீவிரமாக ஏற்றுமதி செய்கின்றன. 155 மிமீ மேம்பட்ட பீரங்கி துப்பாக்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications