ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்!! பெரிய சம்பவம் காத்திருக்கு!!

டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். திருமணம், வேலை , கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக செல்ல வேண்டிய லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே சிக்கித் தவிக்க நேர்ந்தது.

இண்டிகோ பிரச்சினை: விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விமான போக்குவரத்து ஆணையரகம் விமானிகளுக்கான ஓய்வு நேரத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் விமானிகளை பணிக்கு அமர்த்தாமல் தவறி விட்டது. இது தான் பிரச்சினையின் அடிப்படை. ஆனால் ஒரு விமான நிறுவனத்தின் தவறு லட்சக்கணக்கான மக்கள் ஏன் பாதிக்கிறது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்! பெரிய சம்பவம் காத்திருக்கு!

ஏன் பாதிப்பு அதிகம்: இந்திய பயணிகள் விமான சேவையில் 2 நிறுவனங்கள் தான் ஆதிக்கத்தில் இருக்கின்றன. ஒன்று இண்டிகோ மற்றொன்று ஏர் இந்தியா. இதில் இண்டிகோ உள்நாட்டு விமான சேவையில் 65% பங்களிப்பை கொண்டுள்ளது. இதனால் தான் இண்டிகோ விமான சேவைகள் ரத்து நாடு முழுவதும் பரவலாக எதிரொலித்தது. இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோவும், ஏர் இந்தியாவும் 90% பங்களிப்பை கொண்டிருக்கின்றன.

அதாவது இந்திய விமான சேவை இரண்டு நிறுவனங்களிடமே முடங்கி கிடக்கிறது. இந்த நிறுவனங்கள் எடுக்கும் எந்த ஒரு மாற்றமும் ஒட்டுமொத்த விமான போக்குவரத்து துறையிலேயே பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு ஒரு உதாரணம் தான் இண்டிகோ விவகாரம்.

அதிகரிக்கும் Duopoly : இப்படி ஒரு குறிப்பிட்ட சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி அந்த சந்தையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை Duopoly என அழைக்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட துறை இரண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இந்த இரண்டு நிறுவனங்கள் ஒரு சின்ன முடிவும் இலட்சக்கணக்கான மக்களை பாதிப்படையச் செய்யும் . இந்தியாவில் தற்போது இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு தேசிய பிரச்சனையாக அது உருவெடுத்ததற்கு முக்கிய காரணம் இந்த Duopoly தான்.

இது விமான சேவையில் மட்டுமல்ல தொலைதொடர்பு சேவை தொடங்கி ஈ காமர்ஸ் டெலிவரி என அனைத்து துறைகளிலுமே இரண்டு நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்! பெரிய சம்பவம் காத்திருக்கு!

உணவு டெலிவரி: இந்தியாவில் உணவு டெலிவரியை எடுத்துக் கொள்வோம் . இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறை இது. சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சோமேட்டோ 58 சதவீத பங்களிப்பையும் ஸ்விக்கி 42 சதவீத பங்களிப்பையும் இந்த துறையில் கொண்டிருக்கின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்! பெரிய சம்பவம் காத்திருக்கு!

வாடகை வாகன சேவை: இந்தியாவில் வாடகை வாகன சேவையில் ஓலா ,ஊபர் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் அதன் பிறகு செயல்பாட்டுக்கு வந்தாலும் இன்று வரை ஓலா , ஊபர் நிறுவனங்களுக்கு நிகராக வர முடியவில்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்! பெரிய சம்பவம் காத்திருக்கு!

ஈகாமர்ஸ்: அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இந்தியாவில் 80 சதவீத ஈ காமர்ஸ் சந்தையில் கொண்டிருக்கின்றன . இந்தியர்களின் போன்களில் கண்டிப்பாக இந்த செயலிகளும் இருக்கும். மீஷோ உள்ளிட்டவை வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் பிளிப்கார்ட், அமேசான் அளவுக்கு அவற்றால் வளர முடியவில்லை .

யுபிஐ: இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ பேமெண்ட் முறையிலும் போன் பே மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..! இண்டிகோ விவகாரம் ஒரு துவக்கம் தான்! பெரிய சம்பவம் காத்திருக்கு!

தொலைத்தொடர்புத்துறை: இந்தியாவின் தொலைதொடர்பு துறை தனியார் நிறுவனங்கள் வசம் தான் இருக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள்ங்கள் தான் தொலைதொடர்பு சேவை துறையில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களாக இருக்கின்றன.

டிடிஹெச் முதல் பெயிண்ட் வரை: இந்தியாவில் டிடிஹெச் சேவையில் டாடா பிளே மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 65% பங்களிப்பை கொண்டுள்ளன. அதே போல சிமெண்ட் உற்பத்தியில் அல்ட்ரா டெக் மற்றும் அதானி நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பங்குச்சந்தை முதலீட்டுக்கான ஸ்டாக் புரோக்கிங் சேவையில் குரோ மற்றும் ஸெரோதா ஆகிய நிறுவனங்களும், பெயிண்ட் துறையில் ஏசியன் பெயிண்ட்ஸ் , பெர்கர் ஆகிய நிறுவனங்களும் அதிக பங்கை கொண்டுள்ளன. ஆன்லைன் டிராவல் புக்கிங் சேவையிலும் கூட மேக் மை டிரிப், கோ பைபோ ஆகியவை 63% பங்களிப்பை கொண்டுள்ளன.

Duopoly ஏன் ஆபத்தானது?: இப்படி இந்தியாவின் பிரதான துறைகள் அனைத்துமே படிப்படியாக Duopoly முறையை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட துறை இரண்டு நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இருப்பது என்பது தற்போதைக்கு சாதாரணமாக தோன்றலாம் , ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று சரியாக செயல்படவில்லை , ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது நேரடியாக லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்யும்.

விலை உயர்வை தடுக்க முடியாது: இப்படி இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு துறையில் ஆதிக்கம் செலுத்துவது பொதுமக்களுக்கும் நல்லதல்ல. ஏனெனில் இந்த நிறுவனங்கள் வழங்கக்கூடிய பொருள் அல்லது சேவை ஆகிய இரண்டுக்கும் அவர்கள் நிர்ணயிப்பது தான் விலையாக இருக்கும். போட்டி இல்லாத இடத்தில் அவர்கள் சொல்வதுதான் விலை, அவர்கள் வழங்குவது தான் சேவை.

திடீரென ஸ்விக்கி, ஸோமேட்டோ டெலிவரி கட்டணத்தை உயர்த்தலாம். ஏன் மழைக்கால கட்டணம் , அதிக டிமாண்டுக்கு கட்டணம், பிளாட்பார்ம் கட்டணம் என இந்நிறுவனங்கள் திடீரென கட்டணங்களை உயர்த்தும் போது நாம் அதனை செலுத்தி தானே ஆக வேண்டி இருக்கிறது.

மக்களுக்கு தான் சிக்கல்: ஏர்டெல்லு, ஜியோவும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினால் நாம் அதனை அப்படி ஏற்று கொள்ள வேண்டிய நிலையில் தானே இருக்கிறோம். இதனால் Duopoly என்பது ஆபத்து என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, பலதரப்பட்ட வருமானம் கொண்ட ஒரு நாட்டிற்கு Duopoly முறை சற்றே தவறினாலும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தும் .

என்ன காரணம்: சரி இந்தியாவில் இப்படி பிரதான துறைகள் ஏன் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடமே முடங்கி கிடக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற துறைகளில் தொழில் புரிய அதிக பணம் தேவை. சிறு நிறுவனங்கள் இதில் வந்தாலும் பெரிய நிறுவனங்கள் அளவுக்கு போட்டி போட்டு மூலதனத்தை திரட்டி செயல்பட முடியாது. பெரிய நிறுவனங்கள் திடீரென தள்ளுபடியை கொடுத்து சிறு நிறுவனங்களை காலி செய்து விடும். அம்பானியின் ஜியோ அப்படி தானே தொலைதொடர்பு துறையை பிடித்தது.

பெரிய இந்த நிறுவனங்கள் உலக அளவில் இருந்தெல்லாம் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று விடுகின்றன ஆனால் சிறு நிறுவனங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை . பொதுமக்களும் அவ்வளவு எளிதாக சிறு நிறுவனங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை . நம்பிக்கை, விலை உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.இது தவிர பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியை பெற வேண்டி இருப்பதும் சிறு நிறுவனங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு துறை போட்டி நிறைந்ததாக இருப்பது தான் நுகர்வோருக்கு நல்லது. ஏனெனில் போட்டி இருந்தால் தான் நிறுவனங்கள் தரத்திலும் விலையிலும் கவனம் செலுத்தும். இல்லை என்றால் தொடக்கத்தில் இருக்கும் தரமும் பொருளுக்கான விலையும் காலப்போக்கில் மங்கி விடும் வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+