அடிச்சு தூக்கும் இந்தியா..ஜிடிபியில் ஏற்பட போகும் சூப்பர் மாற்றம்! பிரபல வங்கி வெளியிட்ட ரிப்போர்ட்!

சென்னை: ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க் (ABD) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), இந்த நிதியாண்டில் 6.7 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயரும் என்று கணித்துள்ளது. கன்ஸ்யூமர் தேவை மற்றும் தனியார் துறை முதலீடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்படும் என்று கூறியுள்ளது.

கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் (ஜிடிபி) என்றால் என்ன? ஜிடிபி என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது இடத்தில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதனை வைத்து தான் அந்நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. ஜிடிபியில் நாமினல் ஜிடிபி, ரியல் ஜிடிபி என இரண்டு வகைகள் உள்ளன.

அடிச்சு தூக்கும் இந்தியா..ஜிடிபியில் ஏற்பட போகும் சூப்பர் மாற்றம்! பிரபல வங்கி வெளியிட்ட ரிப்போர்ட்!

சான்றாக ஒரு மூட்டையின் அரிசி விலை 2022 ஆம் ஆண்டில் 500 ரூபாயாக இருக்கிறது. அதே அரிசி மூட்டையின் விலை 2023 ஆம் ஆண்டில் 700 ரூபாயாக மாறுகிறது. இந்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி கிடையாது. பணவீக்கத்தால் உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக விற்பனை விலையும் 700 ரூபாயாக உள்ளது. இது நாமினால் ஜிடிபி ஆகும். இதே, 100 மூட்டைகள் அரிசி உற்பத்தியாகி, 2022 ஆம் ஆண்டிலும் 2023 ஆம் ஆண்டிலும் அதே ரூபாயில் விற்பனையாகும் போது பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இது ரியல் ஜிடிபி எனப்படும்.

2024 - 2025 ஆம் ஆண்டில், எதிர்பார்க்கப்படும் GDP வளர்ச்சி விகிதம் 2022-2023 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட 7.6% ஐ விட குறைவாக உள்ளது. 2024 - 2025 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவீதம் விரிவடையும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஏடிபி கணித்திருந்தது.

ஏசியன் டெவலப்மெண்ட் வங்கி தனது ஏப்ரல் எடிஷன் அறிக்கையின் படி, 2023 ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி மற்றும் நல்ல மக்கள் சேவையின் காரணமாக பொருளாதாரம் அதிக வளர்ச்சியை அடைந்ததாகவும், இந்த வளர்ச்சி வரும் நாட்களில் தொடரும் என்றும், பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி அதிகமாக இருக்கும். 2025 - 2026 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஏபிடி கணித்துள்ளது.

பொருளாதாரங்களின் வளர்ச்சி குறைவதால், இந்த நிதியாண்டில் ஏற்றுமதிகள் குறைவாக இருக்கும் என்று ADB கூறியது, ஆனால் FY2025 இல் மேம்படும் என்றும் கூறியுள்ளது.

பணவீக்கம் குறைவதால் பணவியல் கொள்கை வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் 2025 நிதியாண்டில் 7.2 சதவீதமாக மேம்படும், என்று ABD கூறியுள்ளது.

FY25 க்கான ADBயின் இந்த வளர்ச்சி கணிப்பு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செய்த கணிப்புகளுக்கு ஏற்ப உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி ஆனது பருவமழை, குறைந்த பணவீக்கம், மற்றும் சேவை துறைகளில் அதிக உற்பத்தி போன்றவை நன்றாக இருக்கும் பட்சத்தில் 7 சதவீதமாக உயரும் என்று கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+