இந்தியாவின் வெளிநாட்டு கடன் என்பது அரசாங்கம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது தனியார் கடன் வழங்குபவர்களிடமிருந்து வாங்கிய கடன் மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களும் வெளிநாட்டுக் கடனில் அடங்கும். கடந்த ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் கொஞ்சம் அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 டிசம்பர் இறுதி நிலவரப்படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக (சுமார் ரூ.62 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் இறுதியில் 64,870 கோடி டாலராக (ரூ.55 லட்சம் கோடி) இருந்தது.
காலாண்டு அடிப்படையில் நம் நாட்டின் வெளிநாட்டு கடன் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் 71,270 கோடி டாலராக இருந்த வெளிநாட்டு கடன் 2024 டிசம்பர் காலாண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு கடன் 19 சதவீதமாக இருந்தது.

இது கடந்த டிசம்பர் காலாண்டில் 19.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, நம் நாட்டின் வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் பெரிய பகுதியை கொண்டுள்ளது. இதன் பங்கு 54.8 சதவீதமாக இருந்தது.
அடுத்தப்படியாக இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் 30.6 சதவீத பங்கினை கொண்டுள்ளது. ஜப்பானிய யென் (6.1 சதவீதம்), எஸ்டிஆர் (4.7 சதவீதம்) மற்றும் யூரோ (3 சதவீதம்) அடிப்படையிலான கடன்கள் கணிசமான பங்கு கொண்டுள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த வெளிநாட்டுக் கடனில் மத்திய அரசின் கடன் முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. மத்திய அரசின் கடன் குறைந்திருப்பது நல்ல அறிகுறியாகும். அதேசமயம் அரசு சாரா துறையின் (தனியார் நிறுவனங்கள் உள்பட) கடன்தான் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுக் கடனில் கடன்கள் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. மொத்த வெளிநாட்டு கடனில் கடன்களின் பங்கு 33.6 சதவீதமாகும். அடுத்ததாக கரன்சி மற்றும் டெபாசிட்டுகள் (23.1 சதவீதம்), வர்த்தக கடன் மற்றும் முன்பணம் (18.8 சதவீதம்) மற்றும் கடன் பத்திரங்கள் (16.8 சதவீதம்) ஆகியவை அடங்கும். 2024 செப்டம்பர் இறுதியில் 6.7 சதவீதமாக இருந்த கடன் திருப்பி செலுத்துதல் (கடன் திருப்பி செலுத்துதல் மற்றும் வட்டி செலுத்துதல்), 2024 டிசம்பர் இறுதியில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications