இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் உச்சமாக பார்க்கப்படுவது புல்லட் ரயில் தான். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல வருடங்களாக இயங்கி வரும் இந்த சேவை இந்தியாவில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 அன்று சேவையை தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த புல்லட் ரயில் திட்டம் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரம் அதிவேக ரயில் பாதையில் இயங்கக்கூடிய திட்டமாகும். மேற்கு இந்திய பகுதியில் முக்கிய வர்த்தக நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை குறைத்து, உலகத் தரம் வாய்ந்த அதிவேக ரயில் சேவையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு.
ஜனவரி 1ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியில் பேசிய அஷ்வினி வைஷ்ணவ் அறிமுக நாள் குறித்து தெரிவித்தது மட்டும் அல்லாமல் இந்த 508 கிலோமீட்டர் புல்லட் ரயில் சேவை படிபடியாக எப்படி இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என்பதையும் விளக்கியுள்ளார்.
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டம் படிப்படியாக திறக்கப்பட உள்ளது. முதலில் சூரத் முதல் பிலிமோரா வரையிலான பகுதி சேவைக்கு வரும். அடுத்து வாபி முதல் சூரத், பின்னர் வாபி முதல் அகமதாபாத், அதன்பிறகு தானே முதல் அகமதாபாத் மற்றும் இறுதியாக மும்பை முதல் அகமதாபாத் வரை முழு பாதையும் இணைக்கப்படும்.
இந்த படிப்படியான அணுகுமுறை சேவையை சுமூகமாக நடத்த உதவும். இதேபோல் அகமதாபாத், வடோதரா, பரூச், சூரத், வாபி, தானே, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் படிப்படியாக இணைக்கப்படும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தில் முதல் புல்லட் ரயில்
அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், 2027 சுதந்திர தினத்தில் புல்லட் ரயில் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்று தெரிவித்தார். இது நாட்டுக்கு முதல் புல்லட் ரயிலை பரிசளிக்கும் என்று அவர் உற்சாகமாக கூறினார்.
வந்தே பாரத் வெற்றி
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றி தான் தற்போது இந்தியாவில் புல்லட் ரயில் அறிமுகம் செய்ய நம்பிக்கை கிடைத்துள்ளது என தெரிவித்தார். மேலும் வந்தே பாரத் ரயிலில் மேம்பட்ட வசதிகள், பாதுகாப்பு மற்றும் தரத்துடன் இரவு பயணங்களுக்கான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் அஷ்வினி வைஷ்ணவ்.
இந்தியா முழுவதும் சுமார் 82 வழித்தடத்தில் 164 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் 3 வகையில் பிரிக்கப்படும் 8 பெட்டிகள், 16 பெட்டிகள், 20 பெட்டிகள் என இயங்கி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications