இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அகமதாபாத்- மும்பை இடையே இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 508 கி.மீ. தொலைவிலான இந்த ரயில் பாதையை நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அமைத்து வருகிறது.
இந்த நிலையில் அகமதாபாத்- மும்பை புல்லட் ரயில் பாதையை அமைப்பதற்கான பணி ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின்னர்தான் இந்த ரயில் தடம் எப்போது இருந்து இயக்கப்படும் என்று நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்லட் ரயில் திட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சுரங்கப்பாதைகள், தூண்கள், அடித்தளங்கள் போன்ற பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
35 கி.மீ.தொலைவிலான சுரங்கப்பாதைகளில் இரும்புப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. முழுப் பாதையையும் அமைப்பதற்கான டெண்டர்களும் குஜராத்தில் இரும்புப்பாதை அமைக்கும் டெண்டர்களும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. 2026 ஆம் ஆண்டில் சூரத்துக்கும் பிலிமோராவுக்கும் இடையே சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என்றார்.
நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தரப்பில், 2023 மார்ச்சில் மகாராஷ்டிராவில் சிவில் கட்டுமானத்துக்கான பணிகள் அளிக்கப்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் திட்டத்துக்குத் தேவையான நிறைய நிலங்கள் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்தில் புல்லட் ரயில் திட்டத்தின் இறுதி நிறைவு தேதியை தர முடியுமா எனக் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மும்பை- அகமதாபாத் ஹைஸ்பீடு ரயில் திட்டம் அனைத்து டெண்டர்களையும் வழங்கியப் பின்னர்தான் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளது.
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் டிசம்பர் 2023இல் முடிவுறும் எனக் கூறப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், கோவிட் தொற்று காரணமாக பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் திட்டத்தின் முதல் பாகமான சூரத்துக்கும் பிலிமோராவுக்கும் இடையிலான 50 கி.மீ. 2026 ஆகஸ்ட்டில் முடிவடையும். இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஒரு ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு பதில் அளிக்கையில் ரயில் டிராக்குகள் இன்னும் அமைக்கப்படவில்லை. 2024 ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் 157 கி.மீ. பாதை முற்றிலும் முடிக்கப்பட்டுவிடும் என்று நேஷனல் ஹைஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கூறியது.
இதனிடையே மார்ச் 28 ஆம் தேதியன்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில் காரிடார் வழி எக்ஸ் 295.5 கி.மீ. தொலைவும், தூண்களும், 153 கி.மீ. சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுவிட்டன என்றார்.
புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்கும். 10 ரயில்நிலையங்களில் நிற்கும் என்று நேஷனல் ஹைஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.
மும்பையிலிருந்து கிளம்பி, தாணே, விரார், போய்சார், வாபி, பிலிமோரா, சூரத், பாரூச், வதோதரா, ஆனந்த், அகமதாபாத்தில் முடியும்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications