டெஸ்லாவுக்கு அப்பன் இந்தியாவின் REVA.. யார் இந்த ஜீனியஸ் சேத்தன் மைனி..!

தொலைநோக்கு சிந்தனை படைத்த தொழில்முனைவோரான சேத்தன் மைனி, பசுமையான எதிர்காலத்துக்கான தனது அர்ப்பணிப்புடன் வாகனப் போக்குவரத்தில் ஒரு புரட்சியைப் படைத்தார்.

மின்சார வாகனங்கள் இன்றைக்கு அதிகரித்து அதன் உச்சத்தை அடைவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, சேத்தன் மைனி வாகனத் துறையில் தனது புரட்சி பயணத்தைத் தொடங்கினார். மின்சார கார் ரேவாவுக்கு அடித்தளம் அமைத்தார்.

டெஸ்லாவுக்கு அப்பன் இந்தியாவின் REVA.. யார் இந்த ஜீனியஸ் சேத்தன் மைனி..!

தொழில்முனைவோரின் கருத்துப்படி சவால்களுக்கு பயப்படாமல், காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பதில் மின்சார வாகனம் முக்கியமானது என்ற அவரது நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

இன்று, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சாதகமான அரசாங்கக் கொள்கைகளுடன், மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவது பெரிய விஷயமே இல்லை. இது எதுவுமே இல்லாத காலக்கட்டத்தில் ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தவர் தான் சேத்தன் மைனி.

டாடா நோனோ காரை கொண்டிய மக்கள்,சேத்தன் மைனி மற்றும் அவர் உருவாக்கிய REVA காரை மக்கள் கொண்டாட மறந்துவிட்டார்கள்.

சேத்தன் மைனி 1992 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (BSME) இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1993 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சேத்தன் மார்ச் 11, 1970 இல் பெங்களூரில் பிறந்தார். அவர் மறைந்த சுதர்சன் கே மைனி மற்றும் ரேவா மைனி ஆகியோரின் மகனாவார். இவருடைய தந்தை இந்தியாவின் முதல் மின்சார கார் REVA வின் உற்பத்தியாளரான மைனி குழுமத் தொழில்களின் நிறுவனர் ஆவார்.

மின்சார வாகன தொழில்நுட்பங்களில் பேட்டரி மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட்டில் சேத்தன் 40க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளார்/ பெற்றுள்ளார்.

இந்தியாவின் முதல் மின்சார காரை உருவாக்குவதற்காக பெங்களூருவில் சேத்தன் மைனி ஒரு குழுவை உருவாக்கி வழிநடத்தினார். ரேவா கார் வெறும் 2 வருட சாதனை நேரத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தினார்.

ரேவா, அறிமுகப்படுத்தப்பட்ட போது, ​​உலகின் மிகவும் மலிவு விலை நகர மின்சார கார் ஆகும். அவர் 2004 இல் லண்டனுக்கு வணிகத்தை விரிவுபடுத்தினார், அங்கு அது G-Wiz இன் கீழ் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றும் பெங்களூரில் பல REVA கார்களை சாலையில் பார்க்க முடியும்.

ரேவா மஹிந்திரா குழுமத்துடன் கைகோர்த்த பிறகு, மஹிந்திரா ரேவா உருவாக்கப்பட்டது, அங்கு சேத்தன் தொழில்நுட்பம் மற்றும் வியூகத்தின் தலைவராக பணியாற்றினார், இதன் பின்பு சிஇஓ-வாக உயர்ந்தார்.

Reva கார் இந்தியாவில் ஜூன் 2001ல் அறிமுகமாகி, அதிகப்படியாக 3 லட்சம் ரூபாய் வரையில் இந்த கார்கள் விற்கப்பட்டது. டெஸ்லா உருவானதே 2003ல் தான் (இது எலான் மஸ்க் வருவதற்கு முன்பு Martin Eberhard மற்றும் Marc Tarpenning உருவாக்கிய காலம்).

சேத்தன் மைனி 2015ல் மஹிந்திரா-வை விட்டு வெளியேறிய பின்பு தற்போது Lithium Urban Technologies, Virya Mobility 5.0, SUN Mobility Pvt Ltd ஆகிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறார்.

உலகம் 100 சதவீத மின்சார வாகன மாற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது, இந்த மாற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக மைனி கருதுகிறார்.

எலக்ட்ரிக் வாகனங்கள் பரிமாற்றத்தில் முச்சக்கர வாகனங்கள் முதல் துறையாக இருக்க வேண்டும் என மைனி கூறுகிறார்,
அதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள்.

சேத்தன் மைனி உருவாக்கிய SUN மொபிலிட்டி, மின்சார வாகன இயக்கத்தை, அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டது. சன் மொபிலிட்டியின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கும், 2030க்குள் இந்தியா முழுவதுமாக மின்சார வாகனம் கொண்ட நாடாக மாறுவதற்கு ஊக்கமளிக்கும் லட்சியத் திட்டங்களுடன், மைனியின் பார்வைக்கு எல்லையே இல்லை.

Story writtent by I. Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+