சென்னை: இந்தியாவில் புழங்கும் ரூபாய் நோட்டுகளில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நோட்டுகளில் ஒன்று ரூ. 100 ரூபாய் நோட்டு. இந்தக் கட்டுரையில், 100 ரூபாய் நோட்டில் காணப்படும் முக்கிய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி காண்போம். இது போன்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதால் போலியான கள்ள நோட்டுகளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ,புதிய லாவெண்டர் நிற 100 ரூபாய் நோட்டு. சரி 100 ரூபாய் நோட்டில் என்னவெல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் பார்த்ததுண்டா?

மக்களிடையே நம்பிக்கை பெறுவதற்கும், கள்ள நோட்டை எளிதாக கண்டறிவதற்கும் இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. தற்போது உங்கள் கைகளில் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
1. மகாத்மா காந்தியின் முகம் அச்சடிக்கப்பட்டுள்ள பக்கம்தான் நோட்டின் முன்பக்கம். ஒரு 100 ரூபாய் நோட்டு 142mm நீளமும், 66mm அகலமும் கொண்டது.
2. காந்திஜியின் படத்திற்கு கீழ் மகாத்மா காந்தி என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளது. நோட்டின் வலதுபுறம் வெற்றிடமாகக் காணப்படும். அதில் மகாத்மா காந்தியின் வாட்டர் மார்க் இருக்கும். அதை வெளிச்சத்தில் பார்த்தால் அது நன்றாக தெரியும். இந்த வாட்டர் மார்க் தெரிவதில் வித்தியாசம் காணப்பட்டால் அந்த நோட்டு கள்ளநோட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
3. அதைத்தொடர்ந்து நோட்டின் இருபுறமும் நோட்டின் மதிப்பான 100 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். அதையும் வெளிச்சத்தில் நம்மால் பார்க்க முடியும். நோட்டின் குறுக்கே ஒரு கோடு போல் உள்ளதை பாதுகாப்பு நூல் என்று அழைக்கிறார்கள். இந்த பாதுகாப்பு நூலில் ஒரு பக்கத்தில் இடைவெளி விட்டும் மறுபுறத்தில் நீளமாகவும் காணப்படும். மைக்ரோ எழுத்துகளில் 'ஆர்பிஐ', 'பாரத்' (தேவ்நகரியில்), என்று எழுதி இருக்கும். அதனை வெளிச்சத்தில் பிடித்து பார்த்தால் அந்த பாதுகாப்பு நூல் ஒரு ஒற்றை கோடாக தெரியும்.
5. பார்க்கும்போது பச்சை நிறமாக தெரியும் அந்த கோடு சற்று நோட்டை ஆட்டிப் பார்த்தால் நீல நிறமாக தெரியும்.
4 நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற படிக்கிணறு (stepwell) 'ராணி கி வாவின்' சித்திரம் இடம் பெற்றுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த படிக்கிணறு, ராணி உதயமதி என்பவரால் அவரது கணவருக்கு நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இந்த சித்திரத்தைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் "Rani Ki Vav" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
5. பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதாக கண்டறிய சாய்ந்த கோடுகள் நூறு ரூபாய் நோட்டில் உள்ளது. இந்த அடையாளம் உயர்ந்து இருக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. விரல்களை வைத்து தொட்டுப் பார்த்தால் இதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகத் தூண் சின்னம், வலது மற்றும் இடது பக்கங்களில் நான்கு கோண கோடுகள், மைக்ரோ-டெக்ஸ்ட் 100 உடன் உயர்த்தப்பட்ட முக்கோண அடையாளக் குறி ஆகியவையும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவுகிறது.
6. 15 மொழிகளில் நோட்டின் பின்புறம் 100 ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. அதில் தமிழ் 13வது இடத்தில் தமிழ் உள்ளது. இந்த நோட்டை வைத்திருக்கிற நபருக்கு, நூறு ரூபாய் வழங்க தயார் என்ற ஒரு உறுதி மொழியில் "I promise to pay the bearer sum of one hundred Rupees" என்று எழுதி ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருக்கும்.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications