இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் அதிகரித்து வருவது, நகை வாங்குவோருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் அதிகரிப்பு, சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், தங்கம் விலை கடந்த 11-ந் தேதி ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே பவுனுக்கு ரூ.960 சரிந்து சற்று ஆறுதல் அளித்தது. அதன் பிறகு 13, 14-ந் தேதிகளில் விலை மீண்டும் உயர்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து 15-ந் தேதி பவுனுக்கு ரூ.800 குறைந்து, 17-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இப்படியாக ஏற்ற, இறக்கத்துடனேயே பயணித்து வரும் தங்கம் விலை, 64 ஆயிரத்தை கடந்து இன்றும் புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.280 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் தங்கம் விலை ரூ.64,560 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், நாளுக்கு நாள் மக்களிடையேயும் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த தங்கம் விலையின் வேகத்திற்கு மத்தியில், சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக, இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது. பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. ஒருவழியாக 2013ம் ஆம் ஆண்டில், ஜியோமைசூர் மற்றும் டெக்கான் கோல்ட்மைன்ஸ் லிமிடெட் என்ற பெங்களூரு நிறுவனம், ஜொன்னகிரி பகுதியில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது.
இருப்பினும், ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2021ம் ஆண்டில், துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இறுதி சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் இந்தத் திட்டம் தங்கத்தை உற்பத்தி செய்யத் தொடங்கும். நிறுவனம் இந்தப் பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 20 டன் மண் அல்லது பாறைகளை வெட்டி எடுத்தால் 50 கிராம் தங்கம் கிடைக்கும் என்றும் 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத் கூறியதாவது, இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம்.ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார். தங்கத்தை வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டால் நேரடியாக 300 பேருக்கும், மறைமுகமாக 3 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications