உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நாட்டின் முதல் சைவ 7 ஸ்டார் ஹோட்டல் திறக்கப்படுகிறது. இங்கு அனைத்து உணவுகளும் முழுக்க முழுக்க சைவ உணவுகளே பரிமாறப்படும்.
மும்பை சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த ஸ்டார் ஹோட்டலைத் திறக்கிறது. ஜனவரி 22 ஆம் தேதியன்று நடைபெறும் புதிய ராமர் கோயில் திறப்புவிழா அன்று இந்த ஹோட்டலும் திறக்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு அந்த நகரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றை புதிதாக அமைப்பதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.
மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகள் தொடங்கியுள்ளன. அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
புதிய அயோத்தி ரயில் நிலையமும் திறக்கப்பட்டது. இத்துடன் அயோத்தியில் நீர்வழி மெட்ரோ ப படகு போக்குவரத்தும் ஜனவரி 22 ஆம் தேதியன்று தொடங்கப்படுகிறது. லக்னௌவில் இருந்து புதிதாக ஹெலிகாப்டர் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ள தி சரயு வளாகத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு ரூ.14.5 கோடி ஆகும்.
மும்பை சார்ந்த தி ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா என்ற நிறுவனம் தி சரயு வளாகத்தை உருவாக்கியுள்ளது.
இது தவிர புனித சரயு நதிக்கரையோரம் பல 5 ஸ்டார் ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. அயோத்தியில் 110க்கும் மேற்பட்ட இடங்களில் ஹோட்டல்கள், லாட்ஜ்களை கட்டுவதற்கு முதலீட்டாளர்கள் இடங்களை வாங்கியுள்ளனர்.
ராமர் கோயில் கட்டுமானத்துக்குப் பிறகு அயோத்தியில் நிலத்தின் விலை நான்கைந்து மடங்கு அதிகரித்துள்ளது. அயோத்தியை ஸ்மார்ட் நகராக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கோயில் அறங்காவலர் பிம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா தெரிவித்தார்.
அயோத்தியை நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஆகிய விமான போக்குவரத்து நிறுவனங்கள் புதிய சேவைகளைத் தொடங்கியுள்ளன. சரயு நதி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவை மூலமாக அயோத்தியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அயோத்தியில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளை இந்த நீர்வழி மெட்ரோ போக்குவரத்து இணைக்கின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications