நாடு முழுவதும் மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் ஜூலை 1 ஆம் தேதி மாலை வெளியாகும் எக்சிட் போல் மிகவும் கூர்ந்து கவனிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு முன்பு இந்திய அரசியல் களத்தையும், தொழில்துறையை அதிர வைக்க வருகிறது இந்தியாவின் ஜிடிபி டேட்டா.
வெள்ளிக்கிழமை 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டின் (ஜனவரி - மார்ச் 2024) மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி எண்கள் வெளியாகவுள்ளன. இதோடு முழு நிதியாண்டுக்கான ஜிடிபி தரவுகளும் வெளியிடப்படவுள்ளன. சந்தை முதலீட்டாளர்களும், தொழிற்துறையினரும் மிகவும் ஆர்வத்துடன் இந்த தரவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி பத்து ஆண்டு ஆட்சிக்குப் பிறகு, மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில், இந்த பொருளாதார வளர்ச்சி தரவுகள் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வர உள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களில், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து பிஜேபி பேசினால், காங்கிரஸ் பணவீக்கம், வேலைவாய்ப்பு, அதீத கடன் என இதர பல முக்கியமான விஷயங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதல் கட்டத்திலிருந்து நிலைப்பாட்டுக்கும், ஜூலை 1 ஆம் தேதி நடக்கும் 7ஆம் கட்ட தேர்தலுக்கும் வெற்றி கணிப்பில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும் கணிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி பத்து ஆண்டு ஆட்சியில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், நேரடி வரி வசூலில் கார்ப்ரேட் வரி வசூல் தொடர்ந்து குறைந்து தனிநபர் வரி வசூல் அதிகரித்துள்ளது.
ஈடி பத்திரிக்கை நிறுவனம் 15 பொருளாதார வல்லுனர்களை கொண்டு நடத்திய கருத்துக்கணிப்பில், 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முழு நிதியாண்டுக்கான வளர்ச்சியும் 7.8 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ET கருத்துக்கணிப்பில் 17 முழு நிதி ஆண்டுக்கான கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தபட்சம் 7.3 சதவீதம் முதல் அதிகபட்சம் 8.1 சதவீதம் வரையிலும் கணிப்புகள் உள்ளன. கடைசி காலாண்டின் வளர்ச்சிக்கான கணிப்புகள் 5.7 சதவீதம் முதல் 7.7 சதவீதம் வரை உள்ளன. கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் (FY23 Q4) இந்தியாவின் பொருளாதாரம் 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் முதல் மூன்று காலாண்டுகளில், (Q1) 7.8 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் (Q2) 7.6 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் (Q3) 8.4 சதவீதமும் வளர்ச்சி கண்டிருந்தது.


Click it and Unblock the Notifications