சென்னை: லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. தற்போது, இந்த இரண்டு கட்சிகள் மத்தியில் நாட்டின், உண்மையான ஜிடிபி அளவு குறித்த விவாதம் பெரும் பிரச்னையாய் வெடித்துள்ளது.
ஜிடிபி என்றால் என்ன?: ஜிடிபி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இதனை 'Gross Domestic Product (GDP)' என்று ஆங்கிலத்தில் கூறுவர். இதனைக் கருத்தில் கொண்டு தான் ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்தந்த நிதியாண்டில் குறைந்துள்ளதா கூடியுள்ளதா எனக் கணக்கிடப்படுகிறது.

சமீபத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான உலக ஜிடிபி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது என்று கூறப்பட்டது. அதில் முதலிடத்தில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது. சீனா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அந்தப் பட்டியலில் அடுத்த, அடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகக் கூறியதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ஏசியன் பெயிண்ட்ஸ்-இன் எம்.டி மற்றும் சி.இ.ஓ அமித் சிங்கிள், ஜிடிபி புள்ளிவிவரங்களும், உண்மையாகவே ஒவ்வொரு துறைகளில் இருந்தும் கணக்கிடப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும், ஜிடிபி கணக்கெடுப்பு துல்லியமாக இல்லை என்றும் கூறி இருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சி, BJP கட்சியை விமர்சிக்கும் வகையில், அதன் அதிகாரபூர்வ X கணக்கில், இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று கூறுவது, தவறான GDP தரவுகளின் அடிப்படையில் உள்ளதா?". மேலும், ஏசியன் பெயிண்ட்ஸ்-இன் எம்.டி & சி.இ.ஓ அமித் சிங்கிள், கூறியதை மேற்கோள்காட்டி, ஜிடிபி மிகப்பெரிய வித்தியாசத்தில் உள்ளது என்றும், உண்மையான ஜிடிபி குறித்த விவரங்கள் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதிவிட்டுள்ளனர்.
மே 9ஆம் தேதி அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் CEO பேசுகையில், நாட்டின் ஜிடிபி அளவிலும், துறைவாரியான ஜிடிபி அளவிலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை எனக் கூறினார். இவர் பேசியதை டிவிட்டரில் காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்துள்ளனர். அவர்கள் ஆன்லைனில் பகிர்ந்த ட்ரான்ஸ்கிரிப்ட்-இன் படி ஏசியன் பெயிண்ட்ஸ் CEO-விடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் சிங்கிள், நடப்பு ஆண்டின் ஜிடிபி விகிதத்திற்கும் உண்மையாகவே கணக்கிடப்பட்ட பல்வேறு துறைகளின் ஜிடிபி விகிதத்திலும் மாற்றங்கள் இருப்பதாகக் கூறினார். இந்த ஆண்டு ஏன் ஜிடிபி விகிதத்தில் வித்தியாசம் இருக்கிறது என்பதை புரிய வைக்க முடியுமா என்று சிங்கிள்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ஜிடிபி விவரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
உண்மையாகவே இந்த ஜிடிபி நம்பர் எதை வைத்து வருகிறது என்று தனக்கு தெரியாது என்றும், சில நேரங்களில் இது போன்ற மாறுபாடுகள் இருப்பதாக நமக்கு தோன்றலாம் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications