கொரோனாவால் முடங்கி போன இந்தியா.. ஜிடிபி 4.5% சரியும்.. ஒப்புக் கொண்ட அரசு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் மக்களை மட்டும் அல்ல, பொருளாதாரத்தினையும் படு மோசமான வீழ்ச்சிக்கு தள்ளி வருகின்றது.

 

இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு விகிதமானது 4.5 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் மதிப்பிட்டதை விட இந்த திட்டம் 6.4 சதவீதம் குறைவு என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் முடங்கி போன இந்தியா.. ஜிடிபி 4.5% சரியும்.. ஒப்புக் கொண்ட அரசு!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் Department of Economic Affairs தனது மேக்ரோ பொருளாதார அறிக்கையில், கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி இல்லாத நிலையில், இதுவரையில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியிலும் நிச்சயமற்ற நிலையே இருந்து வருகிறது. இது கடுமையான சவாலாக உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. எப்படி இருப்பினும் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் மீட்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக நிச்சயம் இது விரைவில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உலகளாவிய சந்தைகளில் இறக்குமதி சரிவு மற்றும் குறைந்த கச்சா எண்ணெய் விலை காரணமாக, இந்த கொடிய தொற்று நோய்க்கு மத்தியிலும் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயமே. நடப்பு நிதியாண்டில் இதுவரை வருவாய் ரசீதுகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் DEA 68.9 சதவீதம் குறைந்துள்ளது. அதோடு பணவீக்கக் கண்ணோட்டமும் தொடர்ந்து பலவீனமானவே உள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து மீட்பு விகிதத்தினை பொறுத்தே இந்த பணவீக்கமும் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி, இந்திய பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 4.5 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் கூறியது. அதோடு முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்தது. ஆக மொத்தத்தில் எல்லா அறிக்கைகளும் சொல்ல இருப்பது ஒன்று தான். பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணும்.

 

ஆக இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி என்பது அரசின் தீவிர நடவடிக்கையும், கொரோனாவுக்கான தடுப்பூசியுமே.. ஆக இது என்று கண்டுபிடிக்கப்படும். மக்கள் என்று இயல்பு நிலைக்கு திரும்புவார்கள், பொருளாதாரம் எப்போது மீண்டு வருமோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indias GDP may down to 4.5% in current financial year

Coronavirus impact.. Indias GDP may down to 4.5% in current financial year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X