டெல்லி: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு குறியீடாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி என்பது பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறதா அல்லது சரிவை சந்தித்திருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றுக்கான ஒரு ரிப்போர்ட் கார்டாக தான் ஜிடிபியை பார்க்கிறோம்.
ஜிடிபி: அந்த வகையில் வெவ்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை ஒப்பிடுவதற்கும் ஜிடிபி தான் பயன்படுத்தப்படுகிறது. ஜிடிபி என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பை குறிக்கும் ஒரு அளவீடாகும் . இந்தியாவை பொறுத்தவரை 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிப்புகளை எல்லாம் மீறி வலுவான ஜிடிபி வளர்ச்சியை கொடுத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

வலுவான ஜிடிபி வளர்ச்சி: மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2026 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதம் என வளர்ச்சி அடைந்திருக்கிறது. பல்வேறு அமைப்புகளும் இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி என்பது 6 முதல் 7 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என கூறின. இந்திய ரிசர்வ் வங்கி கூட இந்தியாவின் ஜிடிபி 6.5% ஆகத்தான் இருக்கும் என கணிப்பு வெளியிட்டிருந்தது . ஆனால் அவற்றையெல்லாம் கடந்து முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதமாக வளர்ந்திருக்கிறது.
5 காலாண்டுகளில் இல்லாத உயர்வு: இதுவே 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5 சதவீதமாக தான் இருந்தது. அதே போல இந்த முறை நாமினல் ஜிடிபியும் 8.8 சதவீதம் என வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 5 காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
என்னென்ன துறைகள் காரணம்: இந்தியாவின் இந்த ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது கட்டுமானம் மற்றும் வேளாண்மை துறை. இந்த துறைகள் வலுவான செயல்பாட்டை காட்டி இருக்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து, உற்பத்தி உள்ளிட்டவையும் உயர்ந்திருப்பதும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது . மத்திய அரசும் தன்னுடைய மூலதன செலவினத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 52% உயர்த்தி இருக்கிறது .
டிரம்ப் வரி: எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் சாக்சி குப்தா இந்தியாவில் கட்டுமானம் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு துறைகளும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார் அதேபோல சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 5.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரி: அடுத்தது அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு ஒரு சவாலான சூழலை உண்டாக்கி இருக்கிறது என கூறும் பொருளாதார நிபுணர்கள், ரிசர்வ் வங்கி எடுக்கக்கூடிய வட்டி குறைப்பு நடவடிக்கைகள், சாதகமான பருவமழை காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி திருத்தம் ஆகியவை அடுத்தடுத்த காலாண்டுகளில் மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்கச் செய்யும் இது பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கான தேவை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications