இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள், கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத லாபத்தை ஈட்டி வருகின்றன. இந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள், அவற்றின் வருவாய் வளர்ச்சி அபாரமாக இருப்பதைக் காட்டுகின்றன. மருத்துவமனைகளின் இந்த பிரம்மாண்ட லாபத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணியை, (ARPOB - Average Revenue Per Occupied Bed) எனப்படும் ஒரு குறியீட்டின் மூலம் கூறப்படுகிறது.
'ஏஆர்பிஓபி' என்பது, ஒரு மருத்துவமனையில் உள்ள படுக்கை ஒன்றுக்கு ஒரு நாளைக்குக் கிடைக்கும் சராசரி வருவாயைக் குறிக்கிறது. இது, ஓட்டல்களில் ஒரு அறைக்குக் கிடைக்கும் வருவாயைப் போன்றது. சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் முன்னணி மருத்துவமனை சங்கிலிகளான மேக்ஸ் மருத்துவமனை, ஃபோர்டிஸ், மெதாந்தா மற்றும் அப்போலோ ஆகியவற்றின் இந்த விகிதம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.

மேக்ஸ் மருத்துவமனை: ஒரு நாளைக்கு ஒரு படுக்கை அறை ரூ.78,000
ஃபோர்டிஸ்: ஒரு நாளைக்கு ஒரு படுக்கை அறை ரூ.73,000
மெதாந்தா: ஒரு நாளைக்கு ஒரு படுக்கை அறை ரூ.67,000
அப்போலோ: ஒரு நாளைக்கு ஒரு படுக்கை அறை ரூ.62,000 கட்டணங்களாக கொண்டுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் 65% அளவில் மட்டுமே நிரம்பியிருந்தாலும், அவை எவ்வாறு இத்தகைய சாதனை லாபத்தை ஈட்டுகின்றன என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை, 'மருத்துவ கலவை' (Clinical Mix) என்ற வார்த்தையில் அடங்கியுள்ளது.
மருத்துவ கலவையும், லாபத்திற்கான வழியும்: 'மருத்துவ கலவை' என்பது, ஒரு மருத்துவமனை மேற்கொள்ளும் வெவ்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளின் விகிதத்தைக் குறிக்கிறது. மருத்துவ சிகிச்சைகள் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன
முதன்மை சிகிச்சைகள் (Primary Procedures): பொதுவான ஆலோசனைகள், வழக்கமான உடல் பரிசோதனைகள்.
இரண்டாம் நிலை சிகிச்சைகள் (Secondary Procedures): எலும்பு முறிவு சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை போன்ற குறைந்த கால மருத்துவமனையில் தங்கும் எளிய சிகிச்சைகள்.
மூன்றாம் நிலை சிகிச்சைகள் (Tertiary Procedures): டயாலிசிஸ், புற்றுநோய் சிகிச்சை போன்ற நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் தேவைப்படும் சிகிச்சைகள்.
நாலாவது நிலை சிகிச்சைகள் (Quaternary Procedures): உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சைகள் போன்ற மிகச் சிறப்பு வாய்ந்த, சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் சிகிச்சைகள்.
இந்திய மருத்துவமனைகள், தங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக, அதிக செலவு பிடிக்கும் மூன்றாம் நிலை மற்றும் நான்காவது நிலை சிகிச்சைகளில் கவனம் செலுத்துகின்றன. ஒரு முதன்மை சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே வருவாய் கிடைக்கும் நிலையில், நான்காவது நிலை சிகிச்சை நோயாளி ஒரு நாளைக்கு ரூ.1,50,000 முதல் ரூ.5,00,000 வரை கட்டணம் செலுத்துகிறார். இதனால் அதிக வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம், படுக்கை நிரம்பாத போதும் கூட, மருத்துவமனைகளால் அதிக லாபத்தை ஈட்ட முடிகிறது.
மருத்துவமனைகளின் ஒப்புதல்: மருத்துவமனைகளின் நிர்வாகிகளே இந்த வியூகத்தை வெளிப்படையாகப் பேசுகின்றனர். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அஷுதோஷ் ராகவன்ஷி, அறுவை சிகிச்சைகளின் அதிகரிப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் போன்ற அதிக லாபம் தரும் நடைமுறைகள் மூலம் வருவாய் 50% க்கு மேல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிகிச்சைகளுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், ஏஆர்பிஓபி விகிதமும் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதே கருத்தை, மேக்ஸ் மருத்துவமனை மற்றும் நாராயணா ஹிருதயாலயா போன்ற பிற முன்னணி மருத்துவமனைகளின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிக லாபம் தரும் சிகிச்சைகளில் கவனம் செலுத்துவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இறுதியாக, நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்: நாம் நம் உடல்நலத்திற்காக அதிக பணம் செலவிடுகிறோமா, அல்லது இந்த மருத்துவமனைகளின் வளர்ச்சி வியூகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோமா? என்ற இந்த கேள்வி, இந்தியாவின் சுகாதார அமைப்பில் உள்ள அணுகல் மற்றும் கட்டணம் குறித்த ஆழமான விவாதத்தை எழுப்புகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications