2024ஆம் நிதியாண்டில் இந்தியாவின் குடும்ப சேமிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 18.1% ஆக குறைந்தது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றாள் இந்திய மக்களின் குடும்ப சேமிப்பு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்து வருவது தான்.
சரி, முதலில் குடும்ப சேமிப்பு என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்வோம் - ஒரு குடும்பம் தனது வருமானத்தில் செலவுக்கு போக சேமிக்கும் பணம். உதாரணமாக, ஒரு குடும்பம் மாதம் ரூ.50,000 சம்பாதித்து, ரூ.40,000 செலவு செய்தால், மீதமுள்ள ரூ.10,000 சேமிப்பு ஆகும். இது வங்கி கணக்கு, முதலீடுகள், அல்லது பணமாக சேமிக்கப்படலாம். இந்த சேமிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம், ஏனெனில் இது முதலீடுகளுக்கு பயன்படுகிறது.

குடும்ப சேமிப்பு சரிவு: CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் குடும்ப சேமிப்பு மூன்றாவது ஆண்டாக சரிந்து, 2024ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 18.1% ஆக உள்ளது என செரிவித்துள்ளது. இது 2015ஆம் நிதியாண்டில் நாட்டின் நிகர குடும்ப சேமிப்பு (Gross domestic savings) 32.2% ஆக இருந்த நிலையில் 2024ஆம் நிதியாண்டில் நிகர குடும்ப சேமிப்பு (Gross domestic savings) 30.7% ஆக குறைந்தது. இது, மக்கள் சேமிப்பதை விட செலவு செய்வது அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
குடும்ப கடன் சுமை உயர்வு: இதேபோல் குடும்ப கடன்கள் 2024ஆம் நிதியாண்டில் GDP-யில் 6.2% ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகமாகும். மக்கள் தங்களுடைய செலவுகளை பூர்த்தி செய்ய கடனை அதிகம் நம்புவதால் இது நிகழ்ந்துள்ளது. உதாரணமாக, வீடு, கார், அல்லது கல்விக்காக மக்கள் அதிக கடன் வாங்குகின்றனர், ஆனால் சேமிப்பு குறைவதால் கடனை திருப்பி செலுத்துவது சவாலாக மாறியுள்ளது.
கிராமப்புறங்களில் பிறந்த நம்பிக்கை: இந்த சவால்களுக்கு மத்தியில், கிராமப்புற இந்தியா தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. பிப்ரவரி 2025-ல், கிராமப்புற ஆண் தொழிலாளர்களின் ஊதியம் வருடாந்திர அடிப்படையில் 6.1% உயர்ந்தது, இது கிராமப்புற பணவீக்கத்தை தொடர்ந்து நான்காவது மாதமாக மிஞ்சியுள்ளது. உணவு பணவீக்கம் குறைவது மற்றும் விவசாயம் சாதகமாக இருப்பது, கிராமப்புறத்தில் டிமாண்டை அதிகரிக்க உதவுகிறது. கிராமப்புற நுகர்வோர் நம்பிக்கை (Rural consumer confidence) 100 என்ற நடுநிலையை எட்டியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
நகர்ப்புறங்களில் பின்னடைவு: கிராமப்புற இந்தியா நம்பிக்கை கொடுத்த நிலையில் நகர்ப்புற இந்திய பயத்தை கொடுத்துள்ளது. நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை பின்னடைவில் உள்ளது என CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மை மற்றும் செலவு அதிகரிப்பு ஆகியவை மக்களை கடுமையாக பாதிக்கிறது.
பணவீக்கம் மற்றும் உணவு விலைகள்: இந்திய மக்களின் சேமிப்பு மற்றும் கடன் ஆகிய இரண்டிலும் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. ஏப்ரல் 2025-ல், நுகர்வோர் விலை குறியீடு (CPI) பணவீக்கம் 3.2% ஆக குறைந்து, ஆகஸ்ட் 2019-க்கு பிறகு மிகக் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.
ஆனால், சமையல் எண்ணெய் (17.4%) மற்றும் பழங்கள் (13.8%) விலைகள் உயர்ந்துள்ளது. ஆனாலும் நாட்டின் உணவு பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. பணவீக்கத்தை தாண்டி வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படும் மாற்றமும், தடுமாற்றமும் இந்திய மக்களின் சேமிப்பு மற்றும் கடன் அளவுகளை பாதிக்கிறது.
இந்திய பொருளாதாரம்: சேமிப்பு குறைவு மற்றும் கடன் சுமை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் நீண்டகால சவால்களை உருவாக்கலாம். சேமிப்பு குறைவதால், முதலீடுகளுக்கு பணம் கிடைப்பது குறையும், இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ஆனால், கிராமப்புற மீட்சி மற்றும் பணவீக்கம் குறைவது நம்பிக்கை அளிக்கிறது. RBI-யின் சமீபத்திய 50 அடிப்படை புள்ளி ரெப்போ விகித குறைப்பு, கடன் வட்டி விகிதங்களை குறைத்து, நுகர்வு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications