திங்கட்கிழமை இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 83 ரூபாய் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள வேளையில் செவ்வாய்கிழமை 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இது அக்டோபர் 2022 க்குப் பிறகு இந்திய ரூபாய் மிகவும் குறைந்த மதிப்பான 83.26 ரூபாய் அளவுக்கு குறைந்ததுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு டாலர் நான்கு ரூபாய்க்கு குறைவாக இருந்த நிலையில் சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு 20 மடங்கு குறைந்துள்ளது.

பணமதிப்பு நீக்கம், வர்த்தக ஏற்றத்தாழ்வு, பட்ஜெட் பற்றாக்குறை, பணவீக்கம், உலகளாவிய எரிபொருள் விலை, பொருளாதார நெருக்கடிகள் போன்றவை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடையச் செய்தது. பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கடந்து இந்தியாவின் பொருளாதாரம் தொடர் வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையில் ரூபாய் மதிப்பின் பயணத்தை ஷாட் அண்ட் ஸ்வீட் ஆக இங்கு பார்க்கலாம்.
இந்திய ரூபாயின் ஆதிக்கம் மற்றும் மதிப்பின் பரிணாம வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கொள்கை மாற்றங்கள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் நடந்தது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 76 வருட சுதந்திரத்தில் உலகளாவிய நிதித் துறையில் ரூபாய் செல்வாக்கு மிக்க நாணயமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 82 ரூபாயில் பொதுவாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இந்திய ரூபாய் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. இந்த சரிவுக்கு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அதன் நிலை முற்றிலும் மாறுப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பயணித்தின் தொடக்கத்தில் ரூபாய் பிரிட்டிஷ் பவுண்டுடன் இணைக்கப்பட்டு மதிப்பிடப்பட்டது. இது வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் ஸ்திரத்தன்மையை உருவாக்கியது.
ஆனால் ரூபாய் - பிரிட்டன் பவுண்ட் இணைப்பு நாட்டின் பண நெகிழ்வுத்தன்மை மற்றும் பண சுதந்திரத்தையும் பெரிய அளவில் பாதித்தது. இதற்கு முக்கிய காரணமாக இந்தியா அதன் சொந்த பொருளாதார அடிப்படைகளுக்கு பதிலாக பிரிட்டன் பவுண்டின் வலிமையை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா நிலையான நாணய விகித (fixed rate currency) முறையைத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் 1948 மற்றும் 1966 ஆம் ஆண்டுக்கு மத்தியில் ஒரு டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 4.79 ஆக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications