13 மாநிலம், 200 டோல் பிளாசா, ரூ.2700 கோடி வருமானம்.. இந்தியாவின் மிகப்பெரிய டோல் பிளாசா நிறுவனம்..!!

ஒவ்வொரு தொழிலிலும் ஒரு பெரிய நிறுவனத்தின் ஆதிக்கம் கண்டிப்பாக இருக்கும். உதாரணமாக, சோப்பு வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், தொலைத்தொடர்பில் ரிலையன்ஸ் ஜியோ, துணியில் ரேமண்ட் இப்படி எந்தவொரு வணிகத்தில் பெரிய நிறுவனங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதுமாதிரி சுங்க கட்டண வசூல் நிறுவனங்களிலும் ஒரு பெரிய கை உள்ளது. நாட்டின் பாதி மாநிலங்களில் இந்நிறுவனத்தின் டோல் பிளாசா உள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த சஹாகர் குரூப் லிமிடெட் (எஸ்.ஜி.எல்.) நிறுவனம்தான் அது.

13 மாநிலம், 200 டோல் பிளாசா, ரூ.2700 கோடி வருமானம்.. இந்தியாவின் மிகப்பெரிய டோல் பிளாசா நிறுவனம்..!!

மகாராஷ்டிராவை சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோரான கிஷோர் அகர்வால் 1996ல் ஹாகர் குரூப் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். முதலில் மும்பையை சுற்றியுள்ள மாநகராட்சி கவுன்சில்களுக்கான சுங்க கட்டணத்தை வசூலிக்கும் பணியை எடுத்து செய்தது.

பின்னர் மகாராஷ்டிராவின் மற்ற மாநகராட்சிகளிலும் இந்த பணியை எஸ்.ஜி.எல். விரிவுப்படுத்தியது. 2008ல் நாக்பூரில் ஒரு திட்டத்துடன் ஒரு கூட்டமைப்பின் ஒரு பகுதியாக சாலை கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சூழ்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் 2010-11ம் நிதியாண்டில் சுங்கவரி வசூலை தனியார்மயமாக்கியது.

இந்த வாய்ப்பை எஸ்.ஜி.எல். சரியாக பயன்படுத்திக் கொண்டது. இதனையடுத்து என்.எச்.ஏ.ஐ.க்கான தனது முதல் சாலை கட்டண வசூல் திட்டத்தை பெற்றது.

அதன் பிறகு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.), மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம்(எம்.எஸ்.ஆர்.டி.சி.) மற்றும் பல்வேறு மாநிலங்களின் பொதுப்பணித்துறைகள் (பி.டபுள்யூ.டி.) போன்ற முக்கிய வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய அதன் திட்ட போர்ட்போலியோவை விரைவாக விரிவுப்படுத்தியது.

இந்நிறுவனம் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட டோல் பிளாசாவை நிர்வகித்து வருகிறது. நாட்டின் பாதி மாநிலங்களில் இந்நிறுவனத்தின் சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. சுங்க கட்டண வசூலை தவிர்த்து, அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் இந்நிறுவனம் எடுத்து செய்கிறது.

2011-12ம் நிதியாண்டில் சஹாகர் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் ரூ.30 கோடி என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் இன்று அது 9 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.2,700 கோடிக்கும் அதிகமாகும்.

இந்நிறுவனத்தின் நிதி வளர்ச்சி, நிறுவனத்தின் மூலோபாய தொலைநோக்குபார்வை மற்றும் சுங்க வசூல் துறையில் செயல்பாட்டு சிறப்பை சான்றளிக்கிறது. இந்நிறுவனத்தில் 4,000த்துக்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்

நம் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. சராசரியாக 60 கி.மீ. தொலைவு இடைவெளியில் இந்த சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் செல்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் சாலை மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் நெடுஞ்சாலை ஆணையங்கள் மூலம் சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அளித்து விடும். அதன் பிறகு தனியார் நிறுவனங்களே சுங்க கட்டணத்தை வசூலிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+