வெறும் 1700 ரூபா சொத்து.. இந்தியாவின் எழை சட்டமன்ற உறுப்பினர் இவர் தான்..!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில் Association of Democratic Reforms அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4001 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்து முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADR அமைப்பின் ஆய்வில் இந்தியாவில் டாப் 10 பணக்கார சட்டமன்ற உறுப்பினர்கள், டாப் 10 ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வெறும் 1700 ரூபா சொத்து.. இந்தியாவின் எழை சட்டமன்ற உறுப்பினர் இவர் தான்..!

ADR அறிக்கையின் படி இந்தியாவிலேயே பணக்கார சட்டமன்ற உறுப்பினராக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் 1,413 கோடி கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். இதேபோல் மேற்கு வங்காளத்தில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்மல் குமார் தாரா என்பவர் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த சொத்து மதிப்புடன் அதாவது வெறும் 1,700 ரூபாய் உடன் ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ / சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள், மூன்று பேர் பாரதிய ஜனதா கட்சியை (BJP) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாப் 10 பணக்கார சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டாப் 10 எழை சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர். வாங்க பார்ப்போம்.

இந்தியாவில் அதிக சொத்துக்கள் உள்ள டாப் 10 பணக்கார சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்

முதல் இடத்தில் டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கனகபுரா, கர்நாடகா 2023 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹1,413 கோடி ரூபாய்.

2வது இடத்தில் KH புட்டஸ்வாமி கவுடா IND கட்சியை சேர்ந்த இவர், கௌரிபிதனூர், கர்நாடகா 2023 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹1,267 கோடி ரூபாய்.

மூன்றாவது இடத்தில் பிரியகிருஷ்ணா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹1,156 கோடி ரூபாய்.

நான்காவது இடத்தில் என் சந்திரபாபு நாயுடு TDP கட்சியை சேர்ந்த இவர், குப்பம், ஆந்திரப் பிரதேசம் 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹668 கோடி ரூபாய்.

ஐந்தாவது இடத்தில் ஜெயந்திபாய் சோமாபாய் படேல் பிஜேபி கட்சியை சேர்ந்த இவர், மான்சா, குஜராத் 2022 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹661 கோடி ரூபாய்.

ஆறாவது இடத்தில் சுரேஷ் பிஎஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ஹெப்பல், கர்நாடகா 2023 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹648 கோடி ரூபாய்.

ஏழாவது இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டி YSRCP கட்சியை சேர்ந்த இவர், புலிவெந்த்லா, ஆந்திரப் பிரதேசம் 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹510 கோடி ரூபாய்.

எட்டாவது இடத்தில் பராக் ஷா பாஜக கட்சியை சேர்ந்த இவர், காட்கோபர் கிழக்கு, மகாராஷ்டிரா 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹500 கோடி

ஒன்பதாவது இடத்தில் டி.எஸ். பாபா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், அம்பிகாபூர், சத்தீஸ்கர் 2018,, இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹500 கோடி

பத்தாவது இடத்தில் மங்கள்பிரபாத் லோதா பிஜேபி கட்சியை சேர்ந்த இவர், மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹441 கோடி ரூபாய்.

இந்தியாவில் மிகக்குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏக்களின் பட்டியல்

முதல் இடத்தில் நிர்மல் குமார் தாரா பிஜேபி கட்சியை சேர்ந்த இவர், சிந்து, மேற்கு வங்கம் 2021 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹1,700 ரூபாய்.

இரண்டாவது இடத்தில் மகரந்த முதுலி IND கட்சியை சேர்ந்த இவர், ராயகடா, ஒடிசா 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹15,000 ரூபாய்.

மூன்றாவது இடத்தில் நரிந்தர் பால் சிங் சவ்னா AAP கட்சியை சேர்ந்த இவர், ஃபசில்கா, பஞ்சாப் 2022 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹18,370 ரூபாய்.

நான்காவது இடத்தில் நரிந்தர் கவுர் பராஜ் AAP கட்சியை சேர்ந்த இவர், சங்ரூர், பஞ்சாப் 2022 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹24,409 ரூபாய்.

5வது இடத்தில் மங்கள் கலிந்தி JMM கட்சியை சேர்ந்த இவர், ஜுக்சலை SC), ஜார்கண்ட் 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹30,000 ரூபாய்.

6வது இடத்தில் புண்டரிகாக்ஷ்ய சாஹா AITC கட்சியை சேர்ந்த இவர், நபத்விப், மேற்கு வங்காளம் 2021 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹30,423 ரூபாய்.

7வது இடத்தில் ராம் குமார் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சந்திராபூர், சத்தீஸ்கர் 2018 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹30,464 ரூபாய்.

8வது இடத்தில் அனில் குமார் அனில் பிரதான் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இவர், சித்ரகூட், உத்தரப் பிரதேசம் 2022 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹30,496 ரூபாய்.

9வது இடத்தில் ராம் டாங்கோர் பாஜக கட்சியை சேர்ந்த இவர், பந்தனா (எஸ்டி), மத்தியப் பிரதேசம் 2018 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹50,749 ரூபாய்.

10வது இடத்தில் வினோத் பிவா நிகோல் சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த இவர், தஹானு (எஸ்டி), மகாராஷ்டிரா 2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ₹51,082 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+