ஈரான் போர் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் தொடங்கி ஹோட்டல்கள், ஆலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி வரை இந்தியா தனக்கு தேவையான சுமார் 60% எல்பிஜியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.
இந்தியாவுக்கு சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் தான் எல்பிஜி விநியோகம் செய்கின்றன. இங்கே எல்பிஜி கப்பல்களில் நிரப்பப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அவை சிலிண்டர்கள் மூலம் நமக்கு விற்பனை செய்கின்றன. இந்த எல்பிஜி போக்குவரத்துக்கு முக்கியமானதாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கி நிற்கிறது.

இதனால் தான் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டீக்கடைகள், உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன. செயல்படும் சில உணவகங்களிலும் தோசை ,ஆம்லெட் , மீல்ஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு வெரைட்டி ரைஸ், இட்லி, பொங்கல் உள்ளிட்டவை மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருப்பதால் வணிக பயன்பாடு சிலிண்டர் டெலிவரியை நிறுத்தி வைத்திருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கும் நிலையில் 2 எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வருவதற்கு வழிவகை செய்தது மத்திய அரசு. மீதமுள்ள கப்பல்களை கொண்டு வருவதற்கும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அது மட்டும் நாட்டின் எல்பிஜி தட்டுப்பாட்டை தீர்த்துவிடுமா என்றால் இல்லை. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் தடையின்றி கிடைக்கும், ஆனால் நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள் நிலை அவ்வளவு தான்.
தொழில்கள் , உற்பத்தி பாதிப்பது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே முடங்க செய்துவிடும். எனவே மத்திய அரசு வளைகுடா நாடுகளை விடுத்து மாற்று நாடுகளில் இருந்து எல்பிஜி கொள்முதலை அதிகப்படுத்தியுள்ளதாம். எப்படி கச்சா எண்ணெய் பிரச்சினையை ரஷ்யா மூலம் தீர்த்ததோ அதே போல எல்பிஜி பிரச்சினையை அமெரிக்கா மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கு சராசரியாக 3 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி தேவைப்படுகிறது. எனவே போர் முடியும் வரை பிரச்சினையை தீர்க்க இந்தியா அமெரிக்க எல்பிஜி கொள்முதலை அதிகரித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி கூறுகிறது. எஸ்&பி குளோபல் எனர்ஜி வெளியிடும் தகவலின்படி இந்தியாவுக்குத் தேவையான எல்பிஜி-இல் தற்போது 41 % தான் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது மீதமுள்ள 59% நாம் இறக்குமதி தான் செய்ய வேண்டும். இதில் வளைகுடா நாடுகளிலிருந்து தற்போதைக்கு எல்பிஜி வரத்து சீராகாது என தெரிந்துவிட்டது. எனவே அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து அதிக கொள்முதல் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க எல்பிஜி ஏற்றுமதி பாரம்பரிய வளைகுடா நாட்டு சப்ளையர்களை விட அதிகமாக இருக்கிறது என எஸ்&பி குளோபல் எனர்ஜி தகவல் கூறுகிறது. மார்ச் 5ஆம் தேதி இந்தியாவில் வாராந்திர எல்பிஜி இறக்குமதி 3,22,000 மெட்ரிக் டன்களாக இருந்தது, இது மார் 19ஆம் தேதிக்கான வார முடிவில் 2,65,000 மெட்ரிக் டன்னாக குறைந்திருக்கிறது. இதில் 89,000 டன்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து வந்திருக்கிறது. மீதமுள்ள அனைத்தும் அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து 2.2 மில்லியன் மெட்ரிக் டன்கள் எல்பிஜி-ஐ இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றிருக்கின்றன. 2026இன் முதல் இரண்டு மாதத்திலேயே இந்தியா 4, 80,000 மெட்ரிக் டன் எல்பிஜி-ஐ அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்துள்ளதாம். மார்ச் மாதத்தில் இது இன்னும் அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications