ஈரானில் போர் நடைபெற்று வருவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இந்தியாவில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சிலிண்டர் வழங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை தரும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. டீ ,காபி உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. வீட்டு உபயோக சிலிண்டருக்கும் முன்பதிவு செய்த பலரும் தங்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்கவில்லை என புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். இதற்கிடையே சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலத்தையும் அரசு நீட்டித்து இருக்கிறது.

இந்த சூழலில் தான் இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஈரானிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வருவதற்கு அனுமதி பெற்றது. அந்த வகையில் ஷிவாலிக் , நந்தா தேவி உள்ளிட்ட 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்து அடைந்து விட்டன. ஆனால் இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டை போக்க இந்த இரண்டு கப்பல்களில் கொண்டுவரப்பட்ட எல்பிஜி மட்டுமே போதுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவில் எல்பிஜி நுகர்வு என்பது 1998 ஆம் ஆண்டில் 5,35,000 டன்களாக தான் இருந்தது ஆனால் 2024 - 25 ஆம் ஆண்டில் அது 3.13 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கு எங்கும் விறகு அடுப்புக்கு மாற்றாக கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டதே இந்தியாவில் எல்பிஜி நுகர்வு அதிகரிப்பதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் இதே காலக்கட்டத்தில் கேஸ் உற்பத்தி அதிகரித்ததா என்றால் இல்லை.

அதாவது 1998 ல் இந்தியாவில் கேஸ் உற்பத்தியின் அளவு 3,60,000 டன்களாக இருந்து தற்போது 1.28 மில்லியன் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் தான் இந்தியா தனக்குத் தேவையான பெரும்பாலான எல்பிஜி- ஐ வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தான் இந்தியாவிற்கு எல்பிஜி விநியோகம் செய்யும் நாடுகள்.
இந்த நாடுகளில் இருக்கக்கூடிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் இந்தியா வர வேண்டும். அதுதான் இந்த போரால் தடைப்பட்டுள்ளது. அரசு உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாது , இன்னமும் நாம் வெளிநாட்டில் இருந்து எல்பிஜி வாங்கி தான் ஆக வேண்டும் என்கிறது தரவுகள்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டால் கூட ஒவ்வொரு மாதமும் 29 எல்பிஜி டேங்கர்கள் இந்தியா வந்தால் மட்டுமே உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது மணி கண்ட்ரோல் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி. அதாவது ஒவ்வொரு கப்பலிலும் 46,000 டன்கள் எல்பிஜி கொண்டுவரப்பட்டாலும் 29 இல் இருந்து 34 டேங்கர்கள் வரை வந்தால் மட்டுமே ஒட்டுமொத்த எல்பிஜி தேவையும் இந்தியா பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அடுத்த ஆண்டில் இந்தியாவில் எல்பிஜி தேவை ஒவ்வொரு மாதமும் 2.9 மில்லியன் டன்களாக உயரும். எனவே உள்நாட்டு உற்பத்தி 30 % அதிகரித்தால் கூட 1.4 மில்லியன் டன்கள் பற்றாக்குறை நீடிக்கும். 50 சதவீதமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் கூட நமக்கு 1.34 மில்லியன் டன்கள் தட்டுப்பாடு இருக்கும்.தற்போதைக்கு 2 கப்பல்களில் வந்துள்ள எல்பிஜி கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தை சரி செய்வார்கள், ஆனால் ஆலைகளுக்கு வணிகங்களுக்கு தேவையான எல்பிஜி தேவையை நிறைவேற்ற முடியாது.தற்போதைக்கு 2 கப்பல்களில் வந்துள்ள எல்பிஜி கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தை சரி செய்வார்கள், ஆனால் ஆலைகளுக்கு வணிகங்களுக்கு தேவையான எல்பிஜி தேவையை நிறைவேற்ற முடியாது.
எனவே வளைகுடா நாடுகளை விடுத்து அமெரிக்கா , கனடா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து எல்பிஜி கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. இனி வரும் நாட்களில் இது போன்ற சூழல்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க இந்தியா உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரித்து , சேமிப்பை அதிகப்படுத்த கொள்கைகளை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

Out Of Stock ஆன இண்டக்ஷன் ஸ்டவ்.. பங்குச்சந்தையில் கில்லி ஆக மாறிய 3 பங்குகள்.. ரெடியாகும் முதலீட்டாளர்கள்..!!

அதிகரிக்கும் எல்பிஜி தட்டுப்பாடு: செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்படுகிறதா? அப்போ இண்டர்நெட் சேவை?

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

வதந்தியை நம்பாதீங்க: சிலிண்டர்களுக்கு பற்றாக்குறையே இல்லை! எரிவாயு அமைச்சகம் அதிரடி விளக்கம்?

அதிகரிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு: கடைவீதிகளில் தேடி தேடி இந்த பொருளை வாங்கும் மக்கள்!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

பெங்களூரு மக்களே நிலைமை மோசமாகுதா? சீக்கிரமே பவர் கட் பிரச்சினையும் வரப்போகுதாம்!!

CNG crisis: 20000 ஆட்டோக்கள் இயங்க முடியாமல் நிறுத்தம்.. சென்னை ஸ்தம்பிக்கிறதா..? உண்மை இதுதான்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications

