சென்னை: இந்தியாவில் EV (Electric Vehicle) கார் சந்தை இப்போதுதான் வளர்ந்து வருகிறது. டாடா டியாகோ இவி, டாடா டிகோர் இவி, டாடா பஞ்ச் இவி, டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா XUV400, சிட்ரோன் இ-சி3 மற்றும் எம்ஜி ZS இவி போன்ற சில மின்சார வாகனங்கள் மட்டுமே உள்ளன. இந்த மாடல்கள் அனைத்தும் ரூ.20 லட்சத்திலான தொடக்க விலையில் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் மிகவும் மலிவான மின்சார கார் எம்ஜி கோமெட் இவி. இது ரூ. 7 லட்சம் முதல் கிடைக்கிறது.
MG Comet EV விலை ரூ.6.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.53 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 2024-ஆம் ஆண்டின், ஜனவரி முதல் மே மாதம் வரை, இந்த மின்சார கார் 4,493 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதம் மட்டும் 1,200 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

இந்த எம்ஜி கோமெட் இவி 42PS/110Nm பர்மனண்ட் மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டார் உடன் வருகிறது. இது IP67 தரம் கொண்ட 17.3kWh லித்தியம் அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எம்ஜி கோமெட் இவி கார் 3.3kW சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது 0 முதல் 100% வரை சார்ஜ் செய்ய 7 மணிநேரம் ஆகும். அதுவே 7.4kW சார்ஜர் மூலம், 0-100% சார்ஜ் செய்யும்போது 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். எம்ஜி கோமெட் இவி கார்கள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 230கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
எம்ஜி கோமெட் இவி விலைகள்:
எம்ஜி கோமெட் இவி எக்ஸிக்யூட்டிவ் - ரூ. 6.99 லட்சம்
எம்ஜி கோமெட் இவி எக்சைட் - ரூ 7.98 லட்சம்
எம்ஜி கோமெட் இவி எக்ஸைட் எஃப்சி - ரூ 8.45 லட்சம்
எம்ஜி கோமெட் இவி எக்ஸ்க்ளூசிவ் - ரூ. 9 லட்சம்
எம்ஜி கோமெட் இவி எக்ஸிக்யூட்டிவ் எஃப்சி - ரூ 9.37 லட்சம்
எம்ஜி கோமெட் இவி அம்சங்களைப் பொறுத்தவரை, இந்தக் கார்கள் அசத்தலான வசதிகளைக் கொண்டுள்ளது. LED ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில்லைட்டுகள், காரின் உட்புறத்தில், லெதர் ஸ்டீயரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் 55-க்கும் மேற்பட்ட அம்சங்களை வழங்கும் ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் இந்த வகை கார்கள் வருகின்றன. மின்சார கார் வாங்கும் கனவு இருந்தால், மலிவு விலையில் அசத்தலான அம்சங்கள் நிறைந்த எம்ஜி கோமெட் ஈவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications