முகேஷ் அம்பானி, அசீம் பிரேம்ஜி, சைரஸ் பூனவாலா, ஷிவ் நாடார், குமாரமங்கலம் பிர்லா ஆகிய இந்தத் தலைமுறை கோடீஸ்வரர்களின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்போது அவர்களது வாரிசுகள் தலையெடுத்து விட்டனர்.
குடும்ப பொறுப்புகள் முதல் தொழில் பொறுப்புகள் வரையில் அனைத்தையும் வாரிசுகள் தங்கள் கையில் எடுத்து மிகச் சிறப்பாக நிர்வகிக்கத் தொடங்கிவிட்டனர். தந்தையர் தந்த செல்வத்தை விட அவர்களது உழைப்பில் இப்போது பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர்.

இனி இவர்கள்தான் இந்தியாவின் வருங்கால மகா கோடீஸ்வரர்கள். அவர்கள் பற்றி இனி பார்க்கலாம்.
ஆகாஷ் அம்பானி- ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தில் தலைவர் பதவியை வகிக்கிறார். கூடுதலாக, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் குழுவில் இயக்குநராகப் பணியாற்றுகிறார். லைஃப்ஸ்டைல் ஏசியாவின் படி, அவரது நிகர மதிப்பு ரூ.3,33,313 கோடியாக உள்ளது.
ஆதார் பூனவாலா- சிஇஓ, சீரம் இன்டிடியூட் ஆப் இந்தியா
ஆதார் பூனவாலா, புனேவை தளமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான சைரஸ் பூனாவாலாவின் மகன். ஆதார் பூனாவாலாவின் நிகர மதிப்பு ரூ. 107,533 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இஷா அம்பானி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ஆர்ஐஎல் வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராகப் பதவி வகிக்கிறார். கூடுதலாக, ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றில் நிர்வாகத் தலைமைக் குழுக்களில் முக்கியப் பங்கு வகிக்கிறார். லைஃப்ஸ்டைல் ஏசியாவின் படி, அவரது நிகர மதிப்பு ரூ. 831 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அனன்யா பிர்லா- பாடகி, ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனர்
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் அனன்யா பிர்லா. தொழில் திறன், புத்திசாலித்தனம், இசைத் திறமை ஆகியவற்றின் கலவையாக திகழ்கிறார். அவரது பயணம் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனத்துடன் தொடங்கியது.
இது இந்தியாவின் கிராமப்புற பெண் தொழில்முனைவோரை நிதி உதவி மூலம் மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. கூடுதலாக, அவர் CuroCarte ஐ நிறுவினார். இது ஆடம்பர வாழ்க்கை முறை தயாரிப்புகளைக் காண்பிக்கும் ஒரு ஈ-காமர்ஸ் தளமாகும். அனன்யாவின் இசைத் திறமை 2016 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் தனிப்பாடலான "லிவின் தி லைஃப்" மூலம் பிரகாசித்தது. பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
ரிஷாத் பிரேம்ஜி - செயல் தலைவர், விப்ரோ லிமிடெட்
ரிஷாத் பிரேம்ஜி தனது தந்தை அசிம் பிரேம்ஜியால் நிறுவப்பட்ட விப்ரோ நிறுவனத்தில் செயல் தலைவர் பதவியை வகிக்கிறார். கூடுதலாக, அவர் விப்ரோ-ஜி கூட்டு முயற்சி, விப்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையில் பணியாற்றுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.76,000 கோடி என ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
போர்ப்ஸின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இடம் பெற்றுள்ளார். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் உள்ளார். ஹெச்சிஎல் குழுமத்தின் கீழ் அவரது தந்தை ஷிவ் நாடார் நிறுவிய பட்டியலிடப்பட்ட ஐடி நிறுவனத்துக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
எம்ஐடி இன்ஜினியரிங் பள்ளியில் டீனின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றுகிறார். ஹேபிடேட்ஸ் அறக்கட்டளைக்கு தலைமை தாங்குகிறார். ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக, ரோஷ்னி அறக்கொடை முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 84,330 கோடி ரூபாய்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications