படிப்பு முக்கியம் குமாரு.. ரூ.17,415 கோடி நிறுவனத்தை உருவாக்கிய MBA கோல்டு மெடலிஸ்ட்..

வாழ்கையில் முன்னேற கல்வி அவசியமில்லை என்று ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் அது போன்ற நபர்கள், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும் பிரபலமான தொழிலதிபருமான வினோத் சரஃப்பின் வாழ்க்கை அனுபவத்தை தெரிந்து கொண்டால் தங்களது முடிவுகளை நிச்சயமாக மாற்றி கொள்வார்கள்.

இன்று ரூ.17,415 கோடி நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் அவர், இளங்கலை படிப்பில் மாநில அளவில் முதலிடம் மற்றும் எம்.பி.ஏ.யில் தங்க பதக்கம் வென்றவர். இன்று அவர் அடைந்திருக்கும் உயரத்துக்கு வலிமையான அடித்தளம் போட்டது அவர் கற்ற கல்விதான். வினோத் சரஃப்பின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.

படிப்பு முக்கியம் குமாரு.. ரூ.17,415 கோடி நிறுவனத்தை உருவாக்கிய MBA கோல்டு மெடலிஸ்ட்..

ராஜஸ்தான் மாநிலத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் வினோத் சரஃப். இவர்தான் அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு. வினோத் தனது பள்ளிப்படிப்பை இந்தி மீடியம் பள்ளியில் முடித்தார். சிறு வயது முதலே கல்வியில் அவர் சிறந்த விளங்கினார். தன்னை சுற்றியுள்ள யதார்த்தத்தை மாற்றுவதற்கான ஒரே ஆதாரம் மற்றும் ஆயுதம் கல்விதான் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

தனது 17 வயதில் மாநில அளவில் முதலிடத்துடன் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் ராஜஸ்தானின் பிலானியில் உள்ள மதிப்புமிக்க பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. சேர்ந்தார். தனது 19 வயதில் எம்.பி.ஏ.வில் தங்க பதக்கம் பெற்றார்.

படிப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் வேலை தேட தொடங்கினார். பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவது அவருக்கு பெரும் சவாலாக இருந்தது. அவருக்கு தாய்மொழியான இந்தி மட்டுமே பேச தெரியும் என்பதே இதற்கு காரணம். இருப்பினும் மனம் தளராமல், ஏறக்குறைய பத்தாண்டுகள் பல ஜவுளி நிறுவனங்களில் பணிபுரிந்தார். இதன் மூலம் அவருக்கு விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்தது.

இறுதியில் அவரது விடாமுயற்சி பலனளித்தது. பிர்லா குழுமத்தில் ஒரு முக்கிய பதவியை பெற்றார். தொழிலதிபர் ஆதித்யா பிர்லாவின் வழிகாட்டுதலின்கீழ் மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோல் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரானார்.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மாடர்ன் சின்டெக்ஸ் மற்றும் பில்வாரா குழுமம் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றினார். இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரியாக கார்ப்பரேட் ஏணியின் உச்சத்தை அடைந்தார்.

இருப்பினும் 1990ல் தனது வாழ்க்கையை அடுத்த உயரத்துக்கு கொண்டு சென்ற துணிச்சலான முடிவை எடுத்தார். அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த சி.இ.ஓ. பணியை ராஜினாமா செய்து விட்டு தொழில் தொடங்க முடிவு செய்தார். தனது மகள் வினாதி பெயரில் வினாதி ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இது சிறப்பு ரசாயனங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். வலி நிவாரணி மருந்தான இப்புருஃபனின் முக்கிய மூலப்பொருளான ஐசோபிரைல் பென்சீன் தயாரிப்பில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது.

இன்று இந்நிறுவனம் வினோத் சரஃப்பின் மகள் வினாதி சரஃப் முத்ரேஜா தலைமையில் செயல்பட்டு வருகிறது. வினோத் சரஃப் சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியாக உள்ளது. முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா, ஆனந்த் மகிந்திரா மற்றும் பிறர் போன்ற இந்திய பணக்காரர்களின் பட்டியலில் இவரும் உள்ளார். 2019ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் கடினமாக உழைத்த முன்னேறிய தொழில்முனைவோர் விருதை வினோத் சரஃப் பெற்றார்.

தனது 71 வயதில் 2022ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 96வது இடத்தை பிடித்தார். 2023ம் ஆண்டுக்கான சர்வதேச மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 1,647வது இடத்தை பிடித்துள்ளார். வினோதி ஆர்கானிக்ஸ் நிறுவனம் இவரது புத்திசாலித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.

வினாதி ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு தற்போது ரூ.17,415 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,694.40ஆக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+