உலகளாவிய எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2025 இறுதிக்குள் 80 முதல் 82 டாலர் வரை உயரும் என்று நிபுணர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த உயர்வுக்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பதட்டமான நிலைமை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
டிரம்ப் பல மாதங்களாக தள்ளி வைத்து வந்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலாக்கம் செய்த நிலையில், தற்போது அடுத்த பிரச்சனைக்கு தாவியுள்ளார். டிரம்ப் அமெரிக்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார்.

இதில் முக்கியமாக பார்க்கப்படுவது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் எண்ணெய் வளத்தை அமெரிக்க அரசுடன் இணைந்து உற்பத்தி செய்து அதை உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா நேரடியாக தனது கச்சா எண்ணெய்யை ஆசிய சந்தையில் விற்பனை செய்யவும் முயற்சிகளை தனது வர்த்தக ஒப்பந்தம் மூலம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருப்பக்கம் இருக்க மறுப்புறம் ரஷ்யா-வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கவும், ரஷ்யா-வின் இடத்தை அமெரிக்கா நிரப்பவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமாக ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அபராத வரி விதிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்படைய உள்ளது.
இதுக்குறித்து வெண்டுரா கமாடிட்டி மற்றும் CRM தலைவர் என்.எஸ்.ராமசுவாமி ANI-யிடம் கூறுகையில், " ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் அக்டோபர் 2025 ஒப்பந்தம் தற்போது 72.07 - 76 விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இதன் நெருங்கிய ஆதரவு விலை என்பது 69 டாலராக உள்ளது. இந்த நிலையில் 2025 ஆண்டு முடிவில் 80-82 டாலர் அளவீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.
அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு தண்டனைகளை வரி விதிக்கும் அச்சுறுத்தல் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது என கூறி உறுதி செய்தார். இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து சுமார் 35 சதவீதம் அளவிலான கச்சா எண்ணெய்-யை வாங்கி வருகிறது.
டிரம்ப் இந்த அபராத வரியை இந்தியா மீது விதித்தால் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் வாங்கப்படும் கச்சா எண்ணெய் குறையும், இதனால் இந்தியா பிற நாடுகளிடம் இருந்து அதிகப்படியான விலையில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டி வரும். இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை உருவாகும்.
இதோடு உலகளாவிய எண்ணெய் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு காரணம், டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை 10-12 நாட்களுக்குள் நிறுத்துமாறு அவகாசம் வழங்கியுள்ளார். இதை பின்பற்றாவிட்டால், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் தொடரும் நாடுகளுக்கு 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். இது உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியை பெரிய அளவில் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்த வரியும் நடைமுறைக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100-120 டாலர் வரையில் உயரலாம், அல்லது அதற்கு மேலும் உயரலாம் என்ற கணிப்பும் சந்தையில் நிலவுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 120 ரூபாய்க்கும் அதிகமாக உயர கூடும்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications