அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக வரி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனக் கூறியதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் துவங்கிய பிறகு, இந்தியா ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததையே காரணமாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருவதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
"இந்தியா, மிகப்பெரிய அளவில் ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி, அதனை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்காக மீண்டும் விற்கிறது. உக்ரைனில் எத்தனை பேர் ரஷ்ய வீரர்கள் மூலம் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கவலைப்படுவதில்லை. இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை, மிகவும் அதிக அளவில் உயர்த்த உள்ளோம்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இதற்கு இந்தியா, எண்ணெய் கொள்முதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், நாட்டு நலன்கள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைபெறுவதாக தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை அநியாயமானதும், காரணமில்லாததும் என கடுமையாக கண்டித்தது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின், ஐரோப்பா தங்கள் தேவைக்காக எண்ணெய் வளங்களை மாற்றி விட்டதால், இந்தியாவுக்கு பாரம்பரிய எண்ணெய் விநியோகங்கள் கிடைக்காமல் போனது. இதனால் தான், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியது. அந்த நேரத்தில், உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது அமெரிக்காவால் செயல்பட உதவப்படுவதுடன், வலியுறுத்தப்பட்டும் இருந்தது.
ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடர்பான சர்வதேச விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி நடவடிக்கைகள், நாடாளாவிய பயனர்களுக்காக எரிசக்தி செலவுகளை மிதமாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் வைத்திருக்க எடுக்கப்பட்ட தவிர்க்க முடியாத முடிவுகளாகும். இது உலக சந்தை சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட அவசியம் என தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், யூரோப்பிய ஒன்றியம் மட்டும் ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்கள் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023இல் சேவைகள் வர்த்தகம் மட்டும் 17.2 பில்லியன் யூரோ அளவிற்கு நடைபெற்றது. இது, இந்தியா - ரஷ்யா இடையிலான மொத்த வர்த்தகத்தைவிட பல மடங்கு அதிகமாகும். 2024இல் EU-இன் ரஷியாவில் இருந்து LNG இறக்குமதி 16.5 மில்லியன் டன்களாக உயர்ந்தது.
ரஷ்யா - யூரோப்பிய ஒன்றியம் இடையே எரிசக்தி மட்டுமின்றி, உரங்கள், சுரங்கப் பொருட்கள், இரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகள் தாங்களே ரஷ்யாவுடன் பரந்த அளவிலான வர்த்தக உறவை வைத்துள்ளதைக் காட்டும் வகையில், இந்த விவரங்களை வெளியுறவுத்துறை முன்வைத்துள்ளது.
அமெரிக்கா, இன்று வரை ரஷ்யாவில் இருந்து தங்கள் அணுசக்தி துறைக்காக யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைடு, மின் வாகன் துறைக்காக பல்லாடியம், உரங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறது.
எந்த ஒரு பெரிய பொருளாதார நாடு செய்வதுபோலவே, இந்தியாவும் தனது தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பை காக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications