இந்திய பங்குச் சந்தை 2025 ஆம் ஆண்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ ம வெளியிட்டுள்ளது மூலம் வரலாறு காணாத அளவிலான நிதியை திரட்டியுள்ளன. இது உலகளவில் இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான சந்தையாக மாற்றியுள்ளது.
ஆனால் இந்த வெற்றி இந்திய ரூபாயின் மதிப்பை டாலருக்கு எதிராக குறைத்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ரூபாய் சுமார் 6 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஐபிஓ -வுக்கும் ரூபாய் மதிப்புக்கும் என்ன தொடர்பு..?

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ மூலம் சுமார் 1.95 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம். தொழில்நுட்பம், நிதிச் சேவை, உற்பத்தி போன்ற துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைந்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக வென்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தனர். இப்போது இந்த நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பொதுச் சந்தைக்கு வந்ததால், டாலரில் முதலீடு செய்த நிறுவனங்கள் அனைத்தும் தனது பங்கு இருப்பை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் போது டாலரை ரூபாயாக மாற்றி முதலீடு செய்கின்றனர். இது ரூபாயின் மதிப்பை உயர்த்த உதவுகிறது. ஆனால் ஐபிஓ-வில் பங்குகளை விற்று லாபம் ஈட்டிய பிறகு, அந்த பணத்தை திரும்ப டாலராக மாற்றி தங்கள் நாட்டுக்கு அனுப்புகின்றனர். இதனால் டாலருக்கு தேவை அதிகரித்து ரூபாயின் மதிப்பு குறைகிறது.
2025ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய பங்கு முதலீட்டு விற்பனை மூலம் லாப வெளியேற்றமாக சுமார் 50 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதனால் நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு வரலாற்று சாதனை குறைவான அளவுக்கு வந்துள்ளது.
இது அனைத்து யாரோக்கு நடப்பது போல் தெரிந்தாலும், இவை அனைத்தும் மறைமுக சாமானிய மக்களை தான் பாதிக்கிறது. ரூபாய் மதிப்பு குறையும் காரணத்தால் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், லேப்டாப் முதல் மருந்து பொருட்கள் வரையில் விலை உயரும்.
ஆனால் ரூபாய் மதிப்பு சரிவு என்பது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்கும், ஏனெனில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது டாலரில் வருமானம் கிடைக்கிறது, ரூபாய் மதிப்பில் உற்பத்தி செய்து டாலரில் விற்கும் போது லாபம் அதிகமாகும். இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், இத்தகைய மாற்றங்கள் சந்தையின் உண்மை நிலையை காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியாமல் தவித்தனர். இப்போது ஐபிஓ மூலம் எளிதாக வெளியேற முடிகிறது. இது இந்திய சந்தையை உலகளவில் ஈர்க்கும் ஒன்றாக மாற்றுகிறது. அதே நேரம், பழைய முதலீடுகளின் லாபத்தை எடுத்துச் சென்றாலும், புதிய முதலீடுகளுக்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications