கூமாபட்டி என்ற சிறிய கிராமம் தற்போது தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது. கூமாபட்டி குறித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் பேசி சிலித்துப்போன நிலையில், அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக பாதிக்கும் ரீடைல் பணவீக்கம் குறித்து மத்திய அரசு இன்று மாலை தெரிவித்துள்ளது, பல கவனிக்க மறந்துள்ளனர்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒரு முக்கியமான விஷயம் பணவீக்கம், பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி பணவீக்கத்தின் பாதிப்பு அனைவருக்கும் கட்டாயம் இருக்கும். இப்படிபட்ட பணவீக்கம் 6 வருட சரிவை எட்டியுள்ளது என்றால் சாதாரண விஷயமா..?

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள சில்லறை பணவீக்கம் (retail inflation) தரவுகளில் ஜூன் மாதத்தின் CPI விகிதம் ஆறு ஆண்டுகளில் குறைந்த அளவான 2.10% ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் பணவீக்கம் குறைய முக்கியமான காரணம் உணவு விலைவாசி குறைந்தது தான்.
நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) உணவு பணவீக்கம் மட்டும் சுமார் 50 சதவீத பங்கை வகிக்கும் வேளையில் மே மாதத்தில் உணவு பணவீக்கம் 0.99% இருந்து ஜூன் மாதத்தில் -1.06% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் காய்கறிகள், கடல் உணவு, பருப்பு வகைகள், சர்க்கரை, பால் மற்றும் மசாலாப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் உணவு பணவீக்கம் குறைந்துள்ளது.
ஜனவரி 2019-இல் பதிவான குறைவான அளவுக்கு பின்பு தற்போது குறைவான உணவு பணவீக்கம் அளவு பதிவாகியுள்ளது. மேலும் இந்திய கிராமப்புறங்களில் உணவு பணவீக்கம் -0.92% ஆகவும், நகர்புறங்களில் -1.22% ஆகவும் உள்ளது. உணவு பணவீக்கம் குறைந்தது சாமானிய மக்களுக்கு பெரும் நிவாரணமாக உள்ளது.
மேலும், எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் மே மாதத்தில் 2.84% இருந்து ஜூன் மாதத்தில் 2.55% ஆக குறைந்து, இது பொருளாதாரத்தில் நிலையான பாதையை காட்டுகிறது.
நாட்டின் ரீடைல் பணவீக்கம் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI)இலக்கான 4%க்கும் கீழேயும், எட்டாவது தொடர் மாதமாக 6% என்ற உயர்மட்ட வரம்புக்கும் கீழேயும் இருந்து சாதனை படைத்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications