இந்தியாவின் சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதம் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நவம்பர் மாதம் பணவீக்கம் உயர்வதைப் போலவே டிசம்பர் மாதமும் உயர வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார். இதேபோல் ஆர்பிஐ பணவீக்க இலக்கை 2023 ஆம் 5.4 சதவீத அளவில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை.
இன்று மாலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது. ஆனாலும் இது இந்திய ரிசர்வ் வங்கியின் 2-6 சதவீதம் என வரம்பிற்குள் உள்ளது.

ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உயர்வான அளவான 4.87 சதவீதம் என்ற ரீடைல் பணவீக்கம் பதிவான நிலையில் நவம்பர் மாதம் 5.55 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ரீடைல் பணவீக்கம் மக்கள் தினசரி வாங்கும் காய்கறி முதல் வாழ்க்கையில் சில முறை மட்டுமே வாங்கும் கார், பைக் வரையில் பாதிப்பு இருக்கும்.
அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் நவம்பர் மாத பணவீக்க விகிதம் 0.54 சதவீதமாக உள்ளது. மேலும் ரீடைல் பணவீக்கத்தில் பெரும் பங்கீட்டை வகிக்கும் உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 8.70 சதவீதமாக உள்ளது.
இதேபோல் கிராமப்புறத்தில் ரீடைல் பணவீக்க விகிதம் 5.85 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் ரீடைல் பணவீக்க விகிதம் 5.26 சதவீதமாகவும் உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 4.62 சதவீதமாகவும் மற்றும் 5.12 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் காய்கறி மீதான ரீடைல் பணவீக்கம் 17.7 சதவீதமாக இருந்தது. மேலும், எரிபொருள் மற்றும் லேசான பணவீக்கம் (-)0.77 சதவீதம் அதாவது பணவாட்டமாக உள்ளது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி அளவீடு (IIP) 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 4.1 சதவீதமாக இருந்தது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் இதன் அளவு 5.8 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications