இந்தியாவில் வர்த்தக துறையில் பெரும்பாலும் அதிகளவில் ஆண் தொழிலதிபர்கள் உள்ளனர். இருப்பினும், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை பல பெண்கள் வெற்றிகரமாக நடத்தி வந்தனர் மற்றும் நடத்தி வருகின்றனர்.
அந்த வெற்றிகரமான பெண் தொழிலதிபர்கள் தங்களது ஓய்வு காலத்தை உணர்ந்ததும் தங்களது வாரிசுகளிடம் தொழில் நிர்வாகத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி விடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான், தெர்மாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனு அகா.

தற்போது இவர் சமூக பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவரது வாழ்க்கை பயணத்தின சில பக்கங்களை பார்ப்போம்.
1942 ஆகஸ்ட் 3ம் தேதியன்று மும்பையில் பார்சி ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் அனு அகா பிறந்தார். செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் கல்வி நிறுவனத்திலும் படித்தார். மேலும் அவர் புல்பிரைட் ஸ்காலராக தேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவில் நான்கு மாதங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1965ல் ரோஹிண்டன் (Rohinton)அகாவை அனு திருமணம் செய்தார்.
ரோஹிண்டன், அனுவின் அப்பா நடத்தி வந்த வான்சன் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றியவர். 1980ல் வான்சன் இந்தியா நிறுவனத்தின் பெயர் தெர்மாக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 1982ல் கணவர் ரோஹிண்டன் உடல் நலக்குறைவால் செயல்பட முடியாமல் போனார்.
இதனையடுத்து அனு அகா தெர்மாக்ஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர்.பிரிவில் வேலை செய்ய தொடங்கினார். இதற்கிடையில் ரோஹிண்டன் உடல் நலம் தேறியதையடுத்து மீண்டும் நிறுவன பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் 1995ல் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.
இதனையடுத்து 1996ல் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த ஒராண்டுக்குள் அவரது மாமியார் இறந்தார். மேலும் அவருக்கு அடுத்த அடியாக அவரது மகன் கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதனால் அவர் நிலைகுலைந்து போனார்.
இந்த சூழ்நிலையில், 1999ல் அவரது நிறுவனம் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்தது. இதனையடுத்து அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. 2004ல் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2004 அக்டோபரில் நிறுவனத்தின் பொறுப்பை தனது மகள் மெஹர் புதும்ஜியிடம் ஒப்படைத்தார். அது முதல் 2018 ஆகஸ்ட் வரை நிறுவனத்தில் இயக்குனர்கள் குழுவில் நிர்வாகமற்ற இயக்குனராக இருந்தார். அதன் பிறகு முழுமையாக நிறுவன பணிகளில் இருந்து ஒதுங்கி விட்டார். தற்போது 82 வயதாகும் அனு அகா சமூக பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 2023 டிசம்பர் 4ம் தேதி நிலவரப்படி, அனு அகாவின் சொத்து மதிப்பு ரூ.20,000 கோடியாகும். போர்ப்ஸ் பணக்காரர்கள் இந்தியர்கள் பட்டியலில், இந்திய பொறியியல் துறையில் அவர்தான் பணக்கார பெண்மணி.
தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் வாயிலாக அவர் செல்வத்தை பெறுகிறார். தற்போது தெர்மாக்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.31,869 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று தெர்மாக்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.2,674.60ஆக இருந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications