முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸை விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!

ஜிண்டால் அவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், நாட்டின் மிகச் செல்வந்தர் பெண்மணியும் ஆவார். இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜிண்டால் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதன் மூலம் அவர் தனது செல்வத்தை ஈட்டியுள்ளார்.

சாவித்ரி ஜிண்டால் மார்ச் 28 வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இவரின் மாற்றம் வர்த்தக துறையிலும், ஹரியானா அரசியல் வட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸை விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!

சாவித்ரி ஜிண்டால் டிவிட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், நான் 10 ஆண்டுகளாக ஹிசார் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் தன்னலமின்றி ஹரியானா மாநிலத்தில் பணியாற்றினேன்.

ஹிசார் மக்கள் எனது குடும்பத்திற்கு ஒப்பானவர்கள், எனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸ் தலைமையின் ஆதரவிற்கும், எனக்கு எப்போதும் ஆதரவும், மரியாதையும் அளித்த எனது சகாக்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என சாவித்ரி ஜிண்டால் தனது பதிவில் தெரிவித்தார்.

மார்ச் 24ஆம் தேதி, சாவித்ரி ஜிண்டால் மகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., நவீன் ஜிண்டால், பிஜேபி கட்சியில் சேர்ந்தார், இதை தொடர்ந்து பிஜேபி கட்சி ஹரியானாவில் உள்ள குருஷேத்ரா மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக லோக்சபாவில் குருக்ஷேத்ரா தொகுதியில் பணியாற்றிய ஜிண்டால், பிரதமர் நரேந்திர மோடியின் 'விக்சித் பாரத்' கொள்கைக்கு ஆதரவும் அளிக்க விரும்புவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினார்.

ஜிண்டால் குழுமத்தின் அனைத்து வர்த்தகத்திற்கும் தலைமை தாங்கும் சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பெறும் பணக்கார பெண்ணாக உள்ளார், இதேபோல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 50வது இடத்தில் இருந்தாலும் எளிமையாக இருப்பதை இவர் கொள்கையாகவே கொண்டு உள்ளார்.

ஜிண்டால் குழும நிறுவனத்தை நிறுவிய ஓம் பிரகாஷ் ஜிண்டால் மறைந்ததை தொடர்ந்து இவரின் அனைத்து சொத்துகள், பதவிகள், உரிமைகள் அவரது மனைவியான சாவித்ரி ஜிண்டால்-க்கு வந்தது. ஜிண்டால் குரூப் தற்போது ஸ்டீல், பவர், சிமெண்ட், இன்பரா, சமீபத்தில் பெயிண்ட், ஆட்டோமொபைல் என பல துறையில் இயங்கி வருகிறது.

சாவித்ரி ஜிண்டால்-க்கு 9 பிள்ளைகள் நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், பிருத்வி ஜிண்டால், ரத்தன் ஜிண்டால் ஆகிய 4 மகன்களும், சீமா ஜாஜோடியா, சாரிகா ஜூன்ஜூன்வாலா, உர்மிலா பூவால்கா, நிர்மலா கோயல் ஆகிய பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

சொத்து மதிப்பு எவ்வளவு ?: சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 33.4 பில்லியன் டாலராகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+