யூடியூப் (Youtube) பணத்தை மட்டுமல்ல பலருக்கு வாழ்க்கையே கொடுத்துள்ளது, இன்றைய இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்ய யூடியூப் ஒரு படிக்கெட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் யூடியூராக வேண்டுமெனில் அனுமதி அளிக்கும் நிலைக்கு தமிழ் சமூகம் மாறியுள்ளது.
யூடியூப் மூலம் பணம், புகழ், செல்வாக்கை சம்பாதித்த பலர் இன்று இதை மூலதனமாக வைத்து சொந்தமாக பல தொழில்களை துவங்கியதோடு, பல எட்டா கனியாக இருக்கும் சினிமா துறைக்குள்-ம் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இப்படி தமிழ் யூடியூப்-ல் இர்பான் வியூவ், டிடிஎப் வாசன், டெக் பாஸ், சத்தீஷ் தீபா போன்றவர்கள் அசத்தினாலும் இந்திய அளவில் பலர் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

அப்படி யூடியூப் மற்றும் சமுக வலைத்தளத்தில் கொடிக்கட்டி பறக்கும் Bhuvan Bam இன்று பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். புவன் பம் என்றால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனா bb ki vines கட்டாயம் பலருக்கும் தெரிந்திருக்கும்.
பெரிய ஸ்டூடியோ, பெரிய முதலீடு, பெரிய அளவிலான நடிகர் பட்டாளம் என எந்தொரு ஆர்பாட்டமும் இல்லாமல் தனி ஆளாக ஒட்டுமொத்த இந்திய மக்களை கவர்ந்தவர் புவன் பம், இன்று 26.3 மில்லியன் சப்ஸ்கிரைபர் உடன் பல Influencer-களை மிரட்டுகிறார். ஆனால் இவருடையை ஆரம்ப காலம் மிகவும் கடுமையாக இருந்தது என்றால் மிகையில்லை.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து திரையுலகில் இசை கலைஞராக தனது பணியை துவங்கி இன்று இந்தியாவின் டாப் யூடியூப் ஆக உயர்ந்துள்ளார். குஜராத்-ல் பிறந்த புவன் டெல்லியில் பல கஃபே, ரெஸ்டாரென்ட்-களில் மாலை நேரத்தில் பாடி சம்பாதித்த காலம் உண்டு. அப்போது இவருடைய ஒரு மாத சம்பளம் 5000 ரூபாய் மட்டுமே.
இசை கலைஞராகும் ஆசையை விட்டுவிட்டு யூடியூப் கிரியேட்டராக முடிவு செய்த புவன்-க்கு வாழ்க்கையே மாறியது என்றால் மிகையில்லை, புவன்-க்கு நகைச்சுவையாக பேசுவதும், தனே அனைத்து கதாபாத்திரத்திலும் (ஜம்கட்ஸ் போன்ற) நடிப்பது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பை பெற்று வேகமாக வளர துவங்கினார்.

bb ki Vines-ன் Bhuvan Bam இன்று பல்வேறு OTT தளங்களில் வெப் சீரியஸ் எழுதி இயக்குவது மட்டும் அல்லாமல் திரைப்பட வாய்ப்புகள், யூடியூப் வருமானம், பல்வேறு விளம்பரம், ப்ரோமோஷன் என பலவகையில் சம்பாத்து வருகிறார். இதன் மூலம் புவன் பம் சொத்து மதிப்பு 112 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விரைவில் தமிழ் யூடியூபர்களான இர்பான் வியூவ், டிடிஎப் வாசன், டெக் பாஸ், சத்தீஷ் தீபா ஆகியோரும் இந்த பட்டியலில் வருவார்களா..? வெயிட் அண்ட் வாட்ச்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications