2016-ஆம் ஆண்டு மிகப் பெரிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2000 ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் திரும்பப்பெற்றது. ஆனால் ஒரு காலத்தில் 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளும் இந்தியாவில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? நாட்டின் நிதி வரலாற்றில் அதிகம் அறியப்படாத இவை நாணய நிலப்பரப்பின் பரிணாமத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் எப்போது பயன்படுத்தப்பட்டது? ஏன் அவை இப்போது பயன்படுத்தப்படவில்லை? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் 10,000 ரூபாய் நோட்டுகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முதன்முதலாக 10,000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அப்போது நாட்டில் அதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய மதிப்பில் உருவான நோட்டுகள் இவையாகும். சாதாரண குடிமக்கள் இவ்வளவு பெரிய தொகையை அரிதாகவே கையாண்டனர். மேலும் முதன்மையான வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களால் மட்டுமே இந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்பட்டது.

ஆனால் ஜனவரி 1946-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் 10,000 ரூபாய் நோட்டை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரத்து செய்ய முடிவு செய்தது. இது இரண்டாம் உலகப் போரின் போது அதிகரித்த அளவில் பணத்தை பதுக்கி வைப்பதையும். கருப்புப் பணத்தை தடுக்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எடுத்த போதிலும் 10,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் 1954-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 5,000 ரூபாய் நோட்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது.
ஏன் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது?: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 10,000 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் நோட்டை மீண்டும் பணமதிப்பிழப்பு செய்ய முடிவு செய்தது. அந்த நேரத்தில், இந்த உயர் மதிப்பு நோட்டுகள் பொது மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை, மேலும் அவை பெரும்பாலும் வர்த்தகத்தில் பெரிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
அப்போதைய பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்த நடவடிக்கை, நிதி முறைகேட்டைச் சமாளிப்பதற்கும், பெரிய அளவிலான பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது மிகவும் சிறியதாக தான் இருந்தது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31-ஆம் தேதி, 1976-ஆம் நிலவரப்படி புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் அளவு ரூ.7,144 கோடியாக இருந்தது.
உயர் மதிப்புடைய நோட்டுகள் ஏன் மீண்டும் கொண்டுவரப்படவில்லை?: சமீபத்திய ஆண்டுகளில், ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சில பரிசீலனைகள் நடந்தன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த உயர் மதிப்பு நோட்டுகளை மீண்டும் கொண்டுவரலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால் அதன் பின் எந்த வித அறிவிப்பும் இதுகுறித்து வெளியாகவில்லை.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது, அரசாங்கம் 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டது. இருப்பினும், மே 19-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.


Click it and Unblock the Notifications