இந்தியாவின் கன்ஸ்யூமர் பொருட்கள் சந்தையும் அதன் வர்த்தகமும் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டை கொண்டு இருக்கும் வேளையில், இந்தப் போட்டி மிகுந்த FMCG துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தனது அறிவிப்பில் இந்தியக் கிராமப்புற பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகியிருப்பது மிகவும் தெளிவான அறிகுறிகள் உடன் தெரிகிறது எனக் கவலையுடன் தெரிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் நகர்ப்புற பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டைக் கொண்டு இருந்தாலும், பணவீக்கம், வேலைவாய்ப்புகள், சப்ளை செயினில் கிராமப்புறம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிரிட்டானியா நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ இப்போது பெரும்பகுதி நகர்ப்புறத்தைச் சார்ந்து மட்டுமே உள்ளது. பிரிட்டானியா-வின் மொத்த கிராமப்புற வர்த்தகத்தைக் காட்டிலும் 1.3 மடங்கு வர்த்தகத்தை நகரப்புறத்தில் பெற்று வருகிறது என்பதைச் செப்டம்பர் காலாண்டு முடிவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டானியா நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இதன் மொத்த நிகர லாப அளவுகள் வருடாந்திர அடிப்படையில் 19% வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் ரூ.588 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகியிருந்தாலும் தொடர்ந்து எங்களுடைய வர்த்தகத்தைக் கிராமப்புறத்தில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். நீண்ட கால அடிப்படையில் கிராமப்புறத்தில் எங்கள் நிறுவனத்திற்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார் இதன் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி.
இதேவேளையில் கிராமப்புறத்தில் பொருளாதார மந்த நிலை குறித்த எச்சரிக்கையைப் பிரிட்டானிய வெளியிட்ட இதே வேளையில் அக்டோபர் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை அளவீடும் இதையே தான் காட்டுகிறது.
CMIE வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பின்மை தரவுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் செப்டம்பர் மாதம் 7.09% ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதம் 10.05% ஆக உயர்ந்துள்ளது என CMIE தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக அக்டோபர் மாதத்தில் இந்தியக் கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை 6.2% இல் இருந்து 10.82% ஆக உயர்ந்தது. இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மோசமான பருவமழை காரணமாக விவசாய உற்பத்தி குறைந்துள்ளது, இதனால் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதே நேரத்தில் நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் கணிசமாகக் குறைந்து 8.44% ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications