நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமான அளவு நடைபெறுகிறது. இருப்பினும் அது உள்நாட்டு தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் இறக்குமதி வாயிலாக தேவையின் பெரும் பூர்த்தி செய்யப்படுகிறது. அரபு நாடுகள், ரஷ்யா, அமெரிக்கா உள்பட பல நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. நடப்பு மே மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
18 லட்சம் பேரல்கள்
கெப்லரின் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ESPO பிளன்ட் போன்ற அதிக இலகுரக கிரேடுகளை அதிகளவு வாங்கியுள்ளன. இதனையடுத்து இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் பேரல்களாக அதிகரிக்கும். இது 10 மாதங்களில் இல்லாத அதிகபட்சஅளவாகும்.

இஎஸ்பிஓ பிளன்ட் என்பது ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு குறிப்பிட்ட தரமாகும். உயர் தரம் மற்றும் குறைந்த கந்தக உள்ளடக்கததிற்கு பெயர் பெற்றது. கிழக்கு ரஷ்யாவின் கோஸ்மினோ துறைமுகத்திலிருந்து ஆசிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு செல்லும் கிழக்கு சைபீரியா-பசிபிக் பெருங்கடல் (ESPO)எண்ணெய் குழாயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஆர்டர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த வாரம் ஜூன் மாதத்தில் ஏற்றப்படும் இஎஸ்பிஓ கச்சா எண்ணெய்யை 10க்கும் மேற்பட்ட சரக்குகளுக்கு ஆர்டர் செய்தனர். இதனால் இலகுரக ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான வலுவான தேவை ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை நிறுவனமான ரைஸ்பாட் எனர்ஜியின் மூத்த எண்ணெய் ஆய்வாளர் ஜெய் ஷா கூறுகையில், நாட்டின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எம்ஆர்பிஎல்-ல் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் அலகுகள் மூடல்கள், சாதகமான லாப வரம்புகளில் திரவ வினையூக்கி கிராக்கர்ஸ்கான (எஃப்சிசி) இறக்குமதி தேவைகளை அதிகரித்துள்ளன.
சிக்கா துறைமுகம்
இந்திய சுத்திகரிப்பு ஆலைக்காக மேற்கு சிக்கா துறைமுகத்திற்கு வரும் சரக்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை தொடர்ந்து புறக்கணிப்பதாலும், சீன சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கச்சா எண்ணெய் ஒதுக்கீடுகள் இறுக்கமாக இருப்பதாலும் இந்தியாவுக்கு கூடுதல் இஎஸ்பிஓ வழங்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், சீனாவிற்கான இஎஸ்பிஓ விலைகளை ரஷ்யா உயர்த்தியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications