பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் தான் மத்திய அரசும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்தாண்டு இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூடிய விரைவில் இந்தியாவும் அமெரிக்காவும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திடப் போகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் , அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளோடு மேற்கொண்ட ஒப்பந்தம் அனைத்துமே வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் தான். அதாவது நம் நாட்டில் இருக்கக்கூடிய பொருட்களை அந்த நாடுகளுக்கு குறைந்தபட்ச வரியில் அல்லது வரியே இல்லாமல் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். அதேபோல அந்த நாடுகளை சேர்ந்த பொருட்கள் இந்தியாவில் வரியே இல்லாமல் அல்லது குறைந்தபட்ச வரியில் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து எளிமையானதாக மாறும். ஆனால் உலகளவில் நாம் தலைவராக வேண்டும் என்றால் இந்த வர்த்தக ஒப்பந்தம் மட்டும் போதாது. குறிப்பிட்ட பிரிவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு தான் இந்தியாவுக்கு கிடைக்க போகிறது. இந்தியாவிற்கும் சிலிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தையில் மிக முக்கியமான ஒரு தொழில் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது.
உலகளவில் லித்தியம், தாமிரம், கோபால்ட் உள்ளிட்டவை அரிய கனிமங்களாக அறியப்படுகின்றன. இந்த அரிய வகை கனிமங்கள் அனைத்துமே மின்னணு பொருட்கள் , பேட்டரி, வாகன உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் உள்ளிட்டவற்றில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உலகின் பல பகுதிகளில் இவை கிடைத்தாலும் எளிமையாக பூமியில் இருந்து பிரித்தெடுத்து குறைந்த செலவில் இவற்றை நாம் பயன்படுத்தும் கனிமங்களை மாற்ற ஏதுவான வடிவங்களில் சில நாடுகளில் மட்டுமே இவை கிடைக்கின்றன.

அந்த வகையில் உலகிலேயே அரிய வகை கனிமங்கள் நிறைந்த நாடு சிலி. கூடிய விரைவில் சிலிக்கும் இந்தியாவுக்கும் கையெழுத்தாக இருக்கக் கூடிய ஒப்பந்தத்தின்படி இந்தியா நேரடியாக சிலியில் இருக்கக்கூடிய அரிய வகை கனிமங்களை எடுத்து பயன்படுத்துவதற்கான உரிமத்தை பெற இருக்கிறது. வர்த்தகம் என்பதை தாண்டி அந்த நாட்டின் கனிமங்களை எடுத்து பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒரு உரிமம் இந்தியாவிற்கும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் கிடைக்கப் போகிறது.
உலக அளவில் லித்தியம் இருப்புகளில் சுமார் 30 சதவீதம் சிலி நாட்டில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 9. 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் . அப்படி பார்த்தால் இந்த பூமியிலேயே அதிக அளவில் லித்தியம் இருப்பு வைத்திருக்கக்கூடிய நாடு சிலி தான். அதுவும் மிகச்சிறந்த வகையிலான லித்தியம் என சிலியில் கிடைக்கக்கூடிய லித்தியத்தை வகைப்படுத்துகிறார்கள். இது மட்டுமல்ல உலக அளவில் இருக்கக்கூடிய செம்பில் 24 சதவீதம் சிலியில் தான் இருக்கிறது.
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய செம்பு உற்பத்தியாளர் சிலி. தற்போது அரியவகை கனிமங்கள் உற்பத்தியில் சீனா தான் 90 சதவீத கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. இந்தியா தற்போது மின்சார வாகனம் ,பேட்டரி ,சூரிய ஒளி மின் உற்பத்தி ,விண்வெளி தொழில்நுட்பம் என வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறைகளில் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது இந்த அரிய வகை கனிமங்கள். இவற்றிற்காக நாம் சீனாவை சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் சிலியுடன் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால், நமக்கு நேரடியாக அந்த நாட்டின் கனிமங்களை அணுகும் வாய்ப்பும் எடுத்து தொழில் புரியும் வாய்ப்பும் கிடைக்கும். இது கிடைத்தால் சர்வதேச சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா உடைக்க முடியும். அதே வேளையில் இந்தியாவில் இது மிகப்பெரிய உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகளையும் உண்டாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications