உலகமே கூர்ந்து கவனிக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கிய முதலீட்டு சந்தை என்பதை காட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகளவில் வேகமாக வளரும் நாடுகள் மத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பது மட்டும் அல்லாமல், கடந்த 8 மாதமாக உலக நாடுகள் ரெசிஷன் அச்சத்தில் நடுங்கி வந்த நிலையில் இந்தியா மட்டும் தான் ரெசிஷன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் வலிமையாக இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஜி20 கூட்டத்தில் பல்வேறு நிதி, முதலீடு, கடன், கிரிப்டோ என பலவற்றை உலக நாடுகளின் தலைவர்கள் பேசி வரும் வேளையில் இந்திய பங்குச்சந்தையின் மூலதன மதிப்பீட்டிலும், வெளிநாட்டு நாணய இருப்பிலும் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதை பிரதமர் மோடி வெளிநாட்டு தலைவர்களிடம் நேரடியாக கூறும் முக்கியமான விஷயமாக இருக்கும்.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், திடமான பெருநிறுவன வருவாய் மற்றும் எதிர்பார்க்காத சில்லறை முதலீட்டு உயர்வு ஆகியவற்றால் இந்திய வர்த்தத சந்தை விரிவாக்கம் அடைந்துள்ளது. இதன் விளைவு பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது.

ஈக்விட்டி பெஞ்ச்மார்க் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவின் பங்குச் சந்தை இந்த வாரம் 3.8 டிரில்லியன் டாலர் என்ற மிக உயர்ந்த மதிப்பை எட்டியது, இது G-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி இந்திய சந்தை முதலீட்டுக்கு சிறப்பான சந்தை என்பதை விளம்பரப்படுத்தவும், நாட்டின் திறனை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 16 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர். இது கடந்த 3 வருடத்தில் அதிகமானதாகும். இது மட்டும் அல்லாமல் செப்டம்பர் 1 உடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதாவது FOREX 4.039 பில்லியன் டாலர் உயர்ந்து 598.897 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications