அகமதாபாத்: இந்தியாவில் அமெரிக்க விசாவுக்கான அப்பாயின்மென்ட்கள் திடீரென நீக்கப்பட்டிருப்பதால் நூற்றுக்கணக்கான மாணவர்களின் அமெரிக்க கல்வி குறியாகி இருக்கிறது. அமெரிக்கா சென்று கல்வி பயில்வதற்கான மாணவர் விசாவிற்காக விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களுக்கு திடீரென அப்பாயின்மென்ட் ஸ்லாட்டுகள் இணையதளத்தில் காட்டப்படவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு படிப்புக்காக செல்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களுக்கு சரியான முறையில் விசா விண்ணப்பங்களுக்கான அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டு விசா வழங்கும் நடைமுறைகள் சீராக இருந்ததாகவும் திடீரென மார்ச் மாதத்திலிருந்து மாணவர்களுக்கு விசா அப்பாயின்மென்ட்டுக்கான ஸ்லாட்டுகள் இணையதளங்களில் காட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மார்ச் மாத மத்தியிலிருந்து தற்போது வரை கடந்த 20 இலிருந்து 25 நாட்களில் விசா அப்பாயின்மென்ட் குறித்த எந்த விவரமும் அகமதாபாத்தில் செயல்படும் அமெரிக்க துணை தூதரகத்தில் இணையதளத்தில் unavailable என காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கணக்கான மாணவர்களின் அமெரிக்க கனவினை கேள்விக்குறியாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் விசாவுக்கான அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும் என விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கெல்லாம் ஏப்ரல் மாதத்தில் தான் ஸ்லாட்டுகள் கிடைத்திருக்கிறதாம். தற்போது மே மாதத்திற்கு எந்த தேதியும் இல்லை என காட்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பல்வேறு மாணவர்களும் ஏற்கனவே அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் பெற்று ஐ- 20 விண்ணப்ப படிவங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இடம் இருந்து பெற்று இருக்கின்றனர். திடீரென அவர்கள் இங்கிருந்து செல்வதற்கு விசா கிடைக்காமல் இருப்பது பெரிய சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றதற்கு பிறகு மாணவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் விசா பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் . ஜனவரி மாதம் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் பெற்றவர்கள் உடனடியாக விசா அப்பாயின்மென்ட்களை பெற்றனர் என்றும் தற்போது அதற்கான அனைத்து சான்றிதழ்களை வழங்கினாலும் அவர்களுக்கு விசாவுக்கான அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதனிடையே இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்களில் விசா வழங்குவதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர் . ஒரு சிலர் முறைகேடாக விசா அப்பாயின்மென்ட் ஸ்லாட்டுகளை பெறுவதாகவும் அதனை தடுப்பதற்காக சிஸ்டம் அப்டேட்கள் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். இது கூட மாணவர்களுக்கு விசா அப்பாயிண்ட்மென்ட் ஸ்லாட்டுகள் காட்டாமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் மாணவர் விசாக்களுக்கான ஸ்லாட்டுகள் இணையதளத்தில் காட்டப்படவில்லை என்றும் இந்த நிலை நீடித்தால் நடப்பாண்டில் அமெரிக்க கல்லூரியில் சென்று கல்வி பயில கூடிய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். இதனிடையே அப்படியே மாணவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஸ்லாட் கிடைத்தாலும் சிறிய சிறிய காரணங்களை கூறி அவர்களுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகங்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் அமெரிக்கா சென்று கல்வி பயில்வதும், வேலைக்கு செல்வதும் இனி எளிதான விஷயமாக இருக்காது என்பதே உண்மை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications