சுட்டெரிக்கும் வெயிலால் இந்தியர்கள் மத்தியில் உருவாகி இருக்கும் 9 மணி டிரெண்ட்..!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தை உணர தொடங்கி இருக்கிறார்கள் என்பதால் மக்கள் நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலும் வெப்ப அலையும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் இயன்ற அளவு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயிலால் இந்தியர்கள் மத்தியில் உருவாகி இருக்கும் 9 மணி டிரெண்ட்..!!

இந்த வெயில் காலத்தில் இந்தியாவில் ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்த கோடை காலத்தில் இந்தியர்களின் ஷாப்பிங் பிஹேவியர் பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறதாம். குறிப்பாக இந்தியாவின் முன்னணி நகரங்களில் இரவு 9 மணிக்கு மேல் ஐஸ்கிரீம் ஆர்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஸிவிக்கியின் இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் செயலிகள் மூலம் நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்த 10 முதல் 20 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்து விடுகின்றன.

பால், மளிகை பொருள் உள்ளிட்டவை சேர்த்து கோடை காலத்திற்கு ஏற்ப தயிர் ,ஐஸ்கிரீம், பழ வகைகள் உள்ளிட்டவற்றையும் நாம் இந்த செயலிகள் வாயிலாக ஆர்டர் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு சம்மரில் இன்ஸ்டாமார்டில் என்னென்ன பொருட்கள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டன என்ற விவரங்களை ஸ்விக்கி வெளியிட்டு இருக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலால் இந்தியர்கள் மத்தியில் உருவாகி இருக்கும் 9 மணி டிரெண்ட்..!!

அதில் தேசிய அளவில் இரவு 9 மணிக்கு ஐஸ்கிரீம் ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறது. குறிப்பாக மாலை ஆறு மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஐஸ் கிரீம் ஆர்டர்கள் அதிகமாக வருகின்றன அதிலும் 9 மணி அளவில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆர்டர்கள் வருவதாகவும் வார இறுதி நாட்களில் இவை இன்னும் அதிகரிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

Also Read

தங்களுடைய இன்ஸ்டாமார்ட் செயலியில் மாம்பழம், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் ஆர்டர் செய்யப்படும் அளவு மார்ச் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் 300 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறுகிறது. மாலை வேளையில் ஐஸ் கிரீம் ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாகவும். ஒட்டு மொத்தமாகவும் நாள் முழுவதும் தயிர் ஆர்டர்கள் அதிகம் வருவதாகவும் கூறுகிறது.

இந்த கோடை காலத்தில் இன்ஸ்டாமார்ட்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட பொருளாக முதலிடத்தில் தயிர் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் சாஃப் ட்ரிங்குகள் அதாவது குளிர்பானங்களும் மூன்றாவது இடத்தில் ஐஸ்கிரீமும் இருக்கிறதாம். அடுத்ததாக தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்கள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவற்றுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

Recommended For You

நாட்டின் பிரதான நகரங்களில் எல்லாமே இரவு 9 மணிக்கு ஐஸ்ரீம் ஆர்டர் செய்யப்படும் பேட்டர்ன் ஒரே மாதிரியாக இருக்கிறதாம். குறிப்பாக ஒரு குடும்பத்தினர் உண்ணக்கூடிய அளவிலான ஐஸ்கிரீம் டப்பாக்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறதாம். அதிகபட்சமாக பெங்களூருவில் தான் ஐஸ்கிரீம்கள் ஆர்டர் வந்திருப்பதாக கூறுகிறது.

இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்ட மொத்த ஐஸ்கிரீம்களில் 14 சதவீத ஆர்டர்கள் பெங்களூரு நகரிலிருந்து தான் வந்திருக்கிறதாம். அதேபோல சென்னை ,மும்பை , ஹைதராபாத் , டெல்லி கொல்கத்தா நகரங்களிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது என கூறி இருக்கிறது. நாட்டின் பிரதான நகரங்கள் மட்டும் இல்லாமல் நாகர்கோயில் ,மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருநூறு சதவீதத்திற்கும் மேலாக ஆடர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஸ்விக்கி கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+