பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் சிலர், நல்ல டிவிடெண்ட் அளிக்கும் மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள சிறந்த பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். பங்கு விலை உயர்வு வாயிலாக வருமானம் உயர்ந்தாலும், டிவிடெண்ட் மூலமாக மற்றொரு வழியில் ஆதாயம் கிடைக்கும் என்பதை இதற்கு முக்கிய காரணம். டிவிடெண்ட் ஈவுத்தொகை என்பது ஒரு நிதி விகிதமாகும். இது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் பங்கு விலையுடன் ஒப்பிடும்போது எவ்வளவு டிவிடெண்டாக செலுத்துகிறது என்பதை குறிக்கிறது.
உதாரணமாக, ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் பங்கு விலை ரூ.200ஆக உள்ளது. அப்படியென்றால் பங்கு விலையில் டிவிடெண்ட் வருமானம் 5 சதவீதமாகும். நம் நாட்டில் அதிக டிவிடெண்ட் வருமானம் வழங்கும் டாப் 10 பங்குகள் இதோ.

டபரியா டூல்ஸ்: அடிப்படை கருவிகள் தயாரிப்புகளுக்கு பெற்ற நிறுவனம் டபரியா டூல்ஸ். இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 30.07 சதவீத டிவிடெண்ட் வருவாய் கொடுத்துள்ளது. கருவிகள் தயாரிப்பில் தரம் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இந்நிறுவனத்துக்கு நற்பெயர் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.14.91ஆக இருந்தது.
ஜாக்ரன் பிரகாஷன்: நாட்டின் மிகப்பெரிய ஊடக மற்றும தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜாக்ரன் பிரகாஷன். பிரபல செய்தித்தாளான தைனிக் ஜாக்ரன் இந்நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 5.86 சதவீத டிவிடெண்ட் வருவாய் அளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.71.57ஆக இருந்தது.
கோல் இந்தியா: அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் கோல் இந்தியா. இந்நிறுவனத்தின் டிவிடெண்ட் மகசூல் 5.53 சதவீதமாக உள்ளது.நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனம் கோல் இந்தியா. டிவிடெண்ட் வாயிலாக நம்பகமான வருவாய் வேண்டும் என்பவர்களுக்கு கோல் இந்தியா சிறந்த தேர்வாக இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.354.05ஆக இருந்தது.
அபிராமி பைனான்சியல்: முதலீடு மற்றும் கடன் உள்ளிட்ட நிதி சேவைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது அபிராமி பைனான்சியல் சர்வீசஸ். இந்நிறுவன வாயிலான டிவிடெண்ட் வருவாய் 5.16 சதவீதமாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.56.05ஆக இருந்தது.
விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்: புகையிலை துறையை சேர்ந்த நிறுவனம் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனம் குறிப்பாக சிகரெட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு 4.39 சதவீதம் டிவிடெண்ட் வருவாய் வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் நிலையாக டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.295.70ஆக இருந்தது.
ஸ்டாண்டர்ட் இண்டஸ்ட்ரீஸ்: ஸ்டாண்டர்ட் இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 4.26 சதவீதம் டிவிடெண்ட் வருவாய் வழங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.21.51ஆக இருந்தது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி: நாட்டின் வங்கி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி. இது பின்தங்கிய பிரிவுகளுக்கு நிதி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு 4.22 சதவீதம் டிவிடெண்ட் வருமானத்தை கொடுத்துள்ளது. பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.33.48ஆக உள்ளது.
அடோர் ஃபோன்டெக்: வெல்டிங் மற்றும் கட்டிங் உபகரணங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் அடோர் ஃபோன்டெக். இந்நிறுவனம் 4.21 சதவீதம் டிவிடெண்ட் வருவாய் அளித்துள்ளது.
ருசிரா பேப்பர்ஸ்: காகிதம் மற்றும் காகித பொருட்கள் தயாரிப்பில் ருசிரா பேப்பர்ஸ் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வருவாயாக 4.19 சதவீதம் அளித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.118.05ஆக இருந்தது.
மவானா சுகர்ஸ்: மவானா சுகர்ஸ் நிறுவனம் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 3.98 சதவீதம் டிவிடெண்ட் வருவாய் அளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.89.89ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications