கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சுங்கச்சாவடி வசூல் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, இந்த காலகட்டத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் விரைவான நெடுஞ்சாலை மற்றும் மோட்டார்வே வளர்ச்சியின் காரணமாக, சுங்கச்சாவடிகள் தற்போது முக்கியமான உள்கட்டமைப்பு பகுதியாக மாறிவிட்டன. இவை எளிதான பயணத்தை உறுதி செய்கின்றன மற்றும் அரசு வருவாய்க்கும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன.

இந்த சுங்கச்சாவடிகள், சில மிகுந்த வருவாய் ஈட்டுவதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளன. உயர்ந்த போக்குவரத்து மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருப்பது இவைகளின் வருவாய் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. கிராண்ட் டிரங்க் ரோடு (Grand Trunk Road), டெல்லி-மும்பை நெடுஞ்சாலை (Delhi-Mumbai Highway), மற்றும் கிழக்குக் கரையோர நெடுஞ்சாலை (East Coast Highway) ஆகியவற்றின் வழியாக பயணிக்கும் வாகனங்களிடமிருந்து மிக அதிக அளவில் டோல் வசூலிக்கப்பட்டுள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்த 10 முக்கியமான டோல்கேட்டுகள் சேர்த்து ரூ13,988 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் டாப் 10 சுங்கச்சாவடிகள்: இந்தியாவில் சுங்கச்சாவடி வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த முதல் பத்து சுங்கச்சாவடிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த 10 முக்கியமான சுங்கச்சாவடிகள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.14,000 கோடிக்கு வருவாய் ஈட்டியுள்ளன, இது இந்தியாவின் மொத்த சுங்கச்சாவடி வருவாயின் 7% ஆகும்.
அந்தவகையில், இந்த மிக அதிக வருவாய் ஈட்டிய 10 முக்கிய சுங்கச்சாவடிகளின் இருப்பிடம், சிறப்பம்சங்கள், மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் சாலை வலையமைப்பிற்கும் அவை அளிக்கும் பங்களிப்பு குறித்து விரிவாக பார்ப்போம். மார்ச் 20 அன்று மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த பட்டியலில் முதலிடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள Bharthana சுங்கச்சாவடி ரூ.2,043.81 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) இன் வதோதரா-பருச் பகுதியில் அமைந்துள்ள பர்தானா, ஐந்து ஆண்டு காலத்தில் ரூ.2,043.81 கோடியை வசூலித்துள்ளது, 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.472.65 கோடி வசூலாகியுள்ளது.
2வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் Shahjahan Pur சுங்கச்சாவடி, இது டெல்லியை மும்பையுடன் இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையான NH-48 இன் குர்கான்-கோட்புட்லி-ஜெய்ப்பூர் பிரிவில் அமைந்துள்ளது. ரூ.1,884.46 கோடி வசூல், மேற்குவங்க மாநிலம் Jaladhulagori சுங்கச்சாவடி ரூ.1,538.91 கோடியுடன் 3வது இடத்தில் உள்ளது. இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் ஒரு பெரிய திட்டமான கோல்டன் நாற்கரத்தின் ஒரு பகுதியாகும், இது NH-16 இன் தன்குனி-காரக்பூர் பாதையில் அமைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் Barajod டோல்கேட் ரூ1,480.75 கோடி வருவாயுடன் 4வது இடத்திலும் உள்ளன. இது NH-19 இன் எட்டாவா-சகேரி (கான்பூர்) பிரிவில் அமைந்துள்ள இந்த பகுதி, ஒரு முக்கிய தேசிய நெடுஞ்சாலையான வரலாற்று சிறப்புமிக்க கிராண்ட் டிரங்க் சாலையின் ஒரு பகுதியாகும்.
இதேபோல், 5வது இடத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தின் Gharaunda டோல்கேட் ரூ.1,314. 37 கோடி வசூல் செய்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையான NH-44 இன் பானிபட்-ஜலந்தர் பாதையில் உள்ள சுங்கச்சாவடி ஆகும். இது ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். 6வது இடத்தில் குஜராத் மாநிலத்தின் Chaurasi டோல்கேட் ரூ.1,272.57 கோடி, 7வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் Jaipur Plaza சுங்கச்சாவடி ரூ.1,161.19 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய சுங்கச்சாவடி எது? இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி தொப்பூர் சுங்கச்சாவடி. இந்த டோல்கேட் மூலம் ரூ1,124.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 9வது இடத்தில் உத்தரபிரதேசத்தின் Nawabgand டோல்கேட் ரூ1,096.91 கோடியும், பீகார் மாநிலத்தின் Sasaram டோல்கேட் ரூ.1,071.36 கோடியுடன் 10 வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications