இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன கணக்குகளை மோசடி (Fraud) கணக்குகளாக அறிவித்துள்ளது 3 வங்கிகள். பல்வேறு காரணங்களால் வர்த்தகத்தை இழந்து நிதி நெருக்கடியில் சிக்கிய அனில் அம்பானியின் வர்த்தகங்கள் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்கி வருகிறது.
இதன் படி தற்போது நாட்டின் பல முக்கிய வங்கிகள் அனில் அம்பானியின் நிறுவன கணக்குகளைப் பிராடு கணக்குகள் என அறிவித்துள்ளது.
அனில் அம்பானி
வங்கி தரவுகளின் படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என 3 வங்கிகள் பிராடு அதாவது மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது.
இது அனில் அம்பானிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆர்காம் மற்றும் ரிலையன்ஸ் இன்பராடெல்
இதோடு எஸ்பிஐ மற்றும் யூனியன் பாங்க் ஆப் வங்கி ஆகிய இரு வங்கிகள் ரிலையன்ஸ் டெலிகாம் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் ரிலையன்ஸ் டெலிகாம்.
மேலும் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தையும் எஸ்பிஐ வங்கி மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவன சட்ட தீர்ப்பாயம்
மும்பை நிறுவன சட்ட தீர்ப்பாயம், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், பல்வேறு முயற்சிகள் ஆலோசனைக்குப் பின்பு இந்நிறுவனத்தின் தீர்வு காணும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கிகள் நடவடிக்கை
இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே தற்போது வங்கிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்பராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
மும்பை நிறுவன சட்ட தீர்ப்பாயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் தீர்வு காணும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்நிறுவன சொத்துக்களை வாங்க விண்ணப்பம் அளித்துள்ளது.
4,400 கோடி ரூபாய்
இதன் படி ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் 43,000 டவர் மற்றும் 1,72,000 கிலோமீட்டர் பைபர் நெட்வொர்க் ஆகியவற்றை 4,400 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்கள்
மேலும் மும்பை நிறுவன சட்ட தீர்ப்பாயம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் தீர்வு காணும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இவ்விரு நிறுவனங்களின் சொத்து விற்பனை மூலம் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடியும் என நம்பப்படுகிறது. மேலும் இவ்விரு நிறுவனங்களின் சொத்துக்களை UV Asset Reconstruction நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றத் தயார் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications