சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை நிறுவனங்களும், அவற்றில் பணிபுரிபவர்களும் தான். அதன் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, உலகிலேயே அதிகளவு பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளது. அதில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசு துறைகள், IT தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் பட்டியலில் உள்ள முன்னணி நிறுவனங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வது Fresher-களுக்கு உதவியானதாக இருக்கும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS): தகவல் தொழில்நுட்ப துறையில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான TCS, இந்தியாவில் வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 55 நாடுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. அவர்களில் 4.30 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர்.
இன்ஃபோசிஸ்: டாடா குழுமத்தை போலவே, தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்தியாவில் வேலை வாய்ப்பு வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனம் 3.43 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய IT நிறுவனமாக உள்ளது. இன்ஃபோசிஸின் மிகப்பெரிய சந்தையாக வட அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து ஐரோப்பாவும் உள்ளது.
இந்திய அஞ்சல் துறை (Post Office): இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் அஞ்சல் துறையில் 4.30 லட்சம் பேர் பணிபுரிகின்றனர் மற்றும் 1898 ஆம் ஆண்டு முதல் போஸ்ட் ஆபீஸ்கள் செயல்பட்டு வருகிறது. 1.55 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களுடன், உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் நெட்ஒர்க்கை கொண்டது இந்திய அஞ்சல் துறை.
இந்திய ரயில்வே: உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க்கை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக இந்திய ரயில்வே 12.13 லட்சம் நபர்களைப் பணியமர்த்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக ரயில்வே துறை உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் 3.89 லட்சம் பேரைப் பணியமர்த்துகிறது மற்றும் பெட்ரோலியம், வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உலகின் 48வது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கிறது.
அக்சென்ச்சர்: அக்சென்ச்சர் நிறுவனம் 50 நாடுகளில், உலகம் முழுவதும் 7.33 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதில் 3 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர்.
காக்னிசென்ட்: அமெரிக்க IT மற்றும் கன்சல்டிங் நிறுவனமான காக்னிசென்ட், உலகளவில் 3.44 லட்சம் பேரைப் பணியமர்த்துகிறது. இதில் 2.5 லட்சம் பணியாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
விப்ரோ (Wipro): பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட விப்ரோ நிறுவனம் மார்ச் 2024 வரை 2.34 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 1945இல் நிறுவப்பட்ட விப்ரோ நிறுவனம், ஆரம்பத்தில் எண்ணெய் மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்தியது. அதன் பிறகு 1980களில் IT துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது விப்ரோ இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications