இந்திய அரசியல் மட்டும் அல்லாமல் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்திற்கும் முக்கியமான காலக்கட்டமாக உள்ளது. அடுத்தடுத்து 5 மாநிலங்களில் தேர்தல், 2024ல் பொது தேர்தல் என ஒட்டுமொத்த அரசியல் களமும் சூடாக இருக்கும் வேளையில் மக்களின் நம்பிக்கையை பெற அனைத்து கட்சிகளும் தீவிரமாக முயற்சி செய்கிறது.
இந்த நிலையில் மோடி அரசுக்கு புது சவாலாக இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வெளியாகும் வேலைவாய்ப்பின்மை தரவுகளை தனியார் ஆராய்ச்சி நிறுவனமான CMIE அக்டோபர் மாதத்திற்கு வெளியிட்டு உள்ளது.

அக்டோபர் மாதத்தில் இந்திய கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால், இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்ததாக என CMIE நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 7.09% ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதம் 10.05% ஆக உயர்ந்துள்ளது என CMIE எனப்படும் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை மே 2021-க்குப் பிறகு மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக விழாக்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும் ஆனால் அக்டோபர் மாதம் நவராத்திரி, தசரா பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட போதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாட்டின் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் இந்திய கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை 6.2% இல் இருந்து 10.82% ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் நகர்ப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கணிசமாக குறைந்து 8.44% ஆக உள்ளது. கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கியமான காரணம் உண்டு.
அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மோசமான பருவமழை காரணமாக விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. இதன் வாயிலாக விவாசய துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதே அக்டோபர் மாதத்தில் நகர்ப்புறங்களில் உற்பத்தி மற்றும் நுகர்வு விரிவடைவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் சற்று வலுவாக உள்ளதால் கணிசமான சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை மத்திய அரசு வருடாந்திர அடிப்படையில் மட்டுமே வெளியிடுகிறது, இதோடு ஒவ்வொரு காலாண்டிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதத்தை வெளியிடுகிறது. இதன்படி மத்திய அரசு அக்டோபர் மாதம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை 3.2% உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் CMIE அமைப்பு 170000 பேரிடம் ஆய்வு செய்து மாதாந்திர வேலைவாய்ப்பின்மை அளவீடுகளை ஒவ்வொரு மாதமும் வெளியிடும் காரணத்தால் பொருளாதார வல்லுனர்கள் CMIE தரவுகளை நம்பக்கூடியதாக பார்க்கின்றனர். ஆனால் இது அரசின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications