பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டின் உயரிய விருதான Legion of Honor விருதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், மோடிக்கு அளித்தார். இதோடு 26 ரபேல் போர் ஜெட் விமானங்கள், 3 ஸ்கோர்பின் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்ஸ், இந்திய அரசின் ரியல்டைம் பேமெண்ட் தளமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் UPI சேவையை பயன்படுத்த இந்தியாவும் பிரான்ஸ் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் பயணத்தின் போது பாரிஸ் நகரத்தில் நேற்று அறிவித்தார்.

மோடி பாரிஸ் நகரில் இருக்கும் La Seine Musicale-ல் இந்திய மக்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது பிரான்சில் நாட்டில் இந்தியாவின் UPI ஐப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த யூபிஐ பயன்பாடு ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும், இப்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம், ஈபிள் டவரில் ரூபாய்கள் நாணயத்தில் பணம் செலுத்த முடியும் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கூறினார். மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில் UPI குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமரே இந்த அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
இந்தியாவில் யுபிஐ சேவையை உருவாக்கி, நிர்வாகம் செய்து வரும் மத்திய நிதியமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NCPI) பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பான ஆன்லைன் பேமெண்ட் தளமான Lyra உடன் இணைக்க 2022 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை தொடர்ந்து பல மாத கூட்டு முயற்சியில் இது சாத்தியமாகியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் UPI சேவை தளத்துடன் சிங்கப்பூரில் உள்ள PayNow எனப்படும் உடனடி பேமெண்ட் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டது மூலம் இருநாடுகள் மத்தியிலான பேமெண்ட் மிகவும் வேகமாக நடக்கிறது. உலகிலேயே அதிகப்படியான ரெமிட்டன்ஸ் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் வேளையில் இத்தகைய பேமெண்ட் இணைப்பு நிதிபரிமாற்றத்தில் பெரிய அளவிலான பலன் அளிக்கும்.
இந்தியா கடந்த வருடம் UPI பயன்பாட்டை உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அரசு சுமார் 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications