கையில் பணம் எடுத்துக் கொண்டு கடைக்குச் செல்வதை விட இன்றெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் பலராலும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்று சொல்லப்படுகிற யுபிஐ, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 81 லட்சம் கோடி பரிவர்த்தனைகளைச் செய்து, உலகின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை விஞ்சியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 37 சதவீதம் அதிகரித்துள்ள்ளதாகக் கூறப்படுகிறது.
Paysecure-இன் கருத்துப்படி, UPI ஆனது வினாடிக்கு 3,729.1 பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. இது 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை விட 58 சதவீதம் அதிகமாகும். 2022-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி சீனாவின் Alipay, Paypal மற்றும் பிரேசிலின் PIX-ஐ UPI விஞ்சியுள்ளது.

UPI-யின் மாதாந்திர மற்றும் வருடாந்திர பரிவர்த்தனைகள்: 2023-ஆம் ஆண்டில் UPI மூலம் 117.6 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக அதிக அளவிலான பரிவர்த்தனை எண்ணிக்கை என்று Paysecure நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில், UPI மூலம் ரூ. 20.6 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. UPI-க்கான அதிகபட்ச மாதாந்திர பரிவர்த்தனை ரூ. 20 லட்சம் கோடியாகும். தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரூ. 20 லட்சம் என்ற அதிகபட்ச வரம்பைக் கடந்து பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை வைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகில் முன்னணியில் உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். 40 சதவீத பணம் டிஜிட்டல் மற்றும் UPI மூலம் செய்யப்படுகிறது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) CEO திலிப் அஸ்பே, UPI-இல் வரவிருக்கும் கிரெடிட் வெளியீட்டின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் பரிவர்த்தனைகளை அடையும் என்று கூறியுள்ளார்.
கடந்த மே மாதத்தில் 14.04 பில்லியன் பரிவர்தனைகளுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் UPI பரிவர்த்தனை எண்ணிக்கை 13.89 பில்லியனாக சிறிய சரிவைக் கண்டது, PwC இந்தியா அறிக்கை UPI பரிவர்த்தனைகள் 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 131 பில்லியனிலிருந்து 2028-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டுக்குள் 439 பில்லியனாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இது மொத்தத்தில் 91% அதிகரிப்பாகும்.
UPI ஆனது இந்தியாவில் மட்டுமல்ல, UAE மற்றும் மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், UPI மற்றும் RuPay-ஐ உலகளாவியதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் RBI கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications