ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இது அனைவரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமி தரிசனத்திற்கு சென்றவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டுகொண்டுள்ளது. அதேபோல், ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தன்னை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று கூறியுள்ளார்.
நாட்டில் பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. கோவில், மசூதி, சர்ச் என மக்கள் அதிகம் வழிபடும் புண்ணிய ஸ்தலங்கள் நாடு முழுவதும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த சூழலில் அவற்றின் சொத்துமதிப்புகள் என்ன என்பது சிலருக்கும் தெரியாத ஒரு கேள்வியாகவே உள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் உள்ள கோவில்கள் எண்ணிக்கை என்ன? அவற்றில் பணக்கார கோவில்கள் எது? அவற்றின் நிகர மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் 2 மில்லியன் கோயில்கள் உள்ளன, மேலும் புதிய கோயில்களின் கட்டுமானம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் 9 பணக்கார கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த கோவில்கள் மற்றும் நிகர மதிப்புகளை காணலாம்.
முதலாவதாக ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள இந்த விஷ்ணு கோவில் இந்தியாவிலேயே பணக்கார கோவில் என்று கூறப்படுகிறது இதன் சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டகங்கள், தங்க ஆபரணங்கள், விலை மதிப்பற்ற ரத்தினங்கள் உள்ளிட்ட ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே இதன் மதிப்பு சுமார் ரூ.1.20 லட்சம் கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக திருமலை திருப்பதி வெங்கேடஸ்வரர் கோவில், உலகின் பணக்கார மற்றும் மிகவும் பிரபலமான வழிபாட்டு தலமான திருப்பதி கோவில் ஆந்திராவில் அமைந்துள்ளது இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கம் மற்றும் பணத்தை நன்கொடை அளித்து வருகின்றனர். இதனால் கோவிலின் செல்வமும் அதிகரிக்கிறது. இதன் நிகர மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது. இதன் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.1400 கோடியாக உள்ளது.
வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் திரிகூட மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வைஷ்ணோ தேவி கோவில் இந்து தெய்வமான துர்காதேவியை கொண்டதாகவும், இதில் புனித யாத்திரை ஆனது பல பக்தர்களை இங்கு வர செய்கிறது.இந்த கோவிலிலும் பகதர்கள் நன்கொடை காரணமாக இதன் நிகர மதிப்பு சுமார் ரூ.500 கோடியாக உள்ளது.
ஷீரடி சாய்பாபா கோவில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அனைத்து மதத்தினரையும் வழிபட செய்கிறது. இதனால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இதன் நிகர மதிப்பு ரூ.320 கோடி என மதிப்பிடப்படுகிறது.
பொற்கோவில் அமிர்தசரஸ் பஞ்சாபில் அமைந்துள்ளது. சீக்கிய ஆலயம் அதன் கில்டட் குவிமாடம் மற்றும் அமைதியான ஒளி சமூக சேவையை குறிக்கிறது. இதில் ஏராளமான நன்கொடைகள் குவிகின்றன. இங்கு அனைவருக்கும் இலவச உணவும் வழங்கப்படுகிறது. இதன் நிகர மதிப்பு ரூ.500 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி கோவில் இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது திராவிட கட்டிடகலைக்கு பெயர் பெற்றது. இதில் பார்வதிதேவி மற்றும் சிவபெருமானுக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோவில் பக்தர்களை அதிகளவு ஈர்த்து வருகிறது.
குருவாயூர் கோவில் இதன் மதிப்பு சுமார் ரூ.2500 கோடி ஆகும். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் 5000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கிருஷ்ணர் சிலை உள்ளது. இந்த ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் இதன் நிகர மதிப்பு ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் அமைத்துள்ள சித்தி விநாயகர் கோவில் சுமார் ரூ.125 கோடி நிகர மதிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கக்குவிமாடத்தின் கீழ் விநாயக பெருமான் அமைக்கப்பட்டுள்ளார். இங்கு ஏராளமான நன்கொடைகள் வருகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications