இந்தியாவில் பொருளாதார செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள், தங்களின் நிதி நிலைக்கு ஏற்ப, அதிக தொகையுள்ள காப்பீட்டு பாலிசிகளை தேர்வு செய்கின்றனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. அதிக தொகையுள்ள டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை செல்வந்தர்கள் தேர்வு செய்வதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
சமீபத்திய ஆண்டுகளில், அதிகமான நிகர மதிப்புள்ள HNI-கள் என்று சொல்லப்படுகிற செல்வந்தர்கள் ரூ. 20 கோடி மதிப்புள்ள டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தேர்வு செய்து வருகின்றனர். பாலிசிபஜாரின் சமீபத்திய அறிக்கை இந்த மாற்றத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

அதிக தொகையைக் கொண்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்கள் பொருத்தமற்றவை என்ற வழக்கமான நம்பிக்கையை உடைக்கும் வகையில் இந்தத் தகவல் உள்ளது. ஒரு காலத்தில் பெரிய தொகையாகக் கருதப்பட்ட ரூ. 5 கோடி பாலிசிகள், இப்போது சர்வசாதாரணமாகிவிட்டதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
அதிக தொகையுள்ள பாலிசிகளின் விற்பனை முதன்மையான பெருநகரங்களில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புனே, ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் ரூ.20 கோடி மதிப்புள்ள பாலிசிகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோல், பெங்களூர், சென்னை மற்றும் மும்பை போன்ற நகரங்களில் ரூ.10 முதல் 15 கோடி வரையிலான பாலிசிகளுக்கு அதிக தேவை இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் யார் செல்வந்தர்கள்?: இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள், அவர்களின் நிகர மதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (High net worth individuals - HNWIs): ரூ. 5 கோடி வரை சொத்துக்களை வைத்திருப்பவர்கள்.
மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (Very high net worth individuals - VHNWIs): ரூ.5 கோடி முதல் ரூ.25 கோடி வரை சொத்துக்களை வைத்திருக்கும் தனிநபர்கள்.
மிக மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (Ultra high net worth individuals - UHNWIs): ரூ. 25 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள்.
செல்வந்தர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் பெறுவதற்கான காரணங்கள்:
பாதுகாப்பு: பல தனிநபர்கள் இப்போது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொருத்தமான ரைடர்களுடன் டேர்ம் இன்சூரன்ஸ் பெற்று வருகின்றனர்.
ஸ்பெஷல் எக்சிட் பெனிஃபிட் பிளான்கள்: வாடிக்கையாளர்கள் பாரம்பரிய ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம் திட்டங்களுக்கு மேல் ஸ்பெஷல் எக்சிட் பெனிஃபிட் விருப்பத்துடன் கூடிய திட்டங்களை அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
பெண் வாங்குபவர்கள்: வேலை செய்யும் பெண்கள், வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்கள் என, முன்பு போல் இல்லாமல், பெண்களும் கணிசமான அளவில் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க முன்வருவது பாராட்டத்தக்க விசயமாக உள்ளது.
பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் நம்மை சுற்றி கொட்டிக் கிடந்தாலும், இது போன்ற டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதை, இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் அவற்றில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications